ரெப்போ வட்டி விகிதம் – ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு

Repo Interest Rate RBI New Notification released just now read immediately

இந்தியாவில் இருக்கும் மத்திய ரிசர்வ் வங்கியினுடைய கவர்னராக சக்திகாந்த தாஸ் செயல்படுகிறார். இந்த நிலையின்போது நிதிக் கொள்கை குழு கூட்டமானது கடந்த 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. அப்போது வட்டி விகிதங்களில் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடந்து அதே நிலைகளிலேயே நீட்டித்துள்ளதாக முடிவு எடுக்கப்பட்டது. அதனையடுத்து ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதாவது 6.5% சதவிகிதப்படியே ரெப்போவினுடைய வட்டி விகிதமானது நீட்டிக்கப்படும். மற்றும் ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் கிடையாது என்றும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் கூறினார். இதனால் இது மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தரும் செய்தியாக காணப்பட்டுள்ளது. அதாவது, வங்கிக்கடனை இந்த முறைகளில் வாங்கியவர்கள் ஏற்கனவே இருந்த குறைந்த வட்டிகளிலேயே கடனை செலுத்த வழிவகை செய்யப்பட்டிருக்கின்றது. இந்த வட்டியானது மீண்டும் அதிகரிக்கபட வாய்ப்பிருக்காது.

தொடர்ந்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பணவீக்கம் நாடுகளில் கட்டுக்குள் இருப்பதை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்துக்கொண்டு இருக்கின்றது. அதுவுமல்லாது ரிசர்வ் வங்கியானது பணவீக்கம் 4 சதவிகிதத்துக்கும் அதிகமாக நடுப்பு நிதியாண்டின்போது காணப்படக்கூடும் எனவும் கணித்திருக்கிறது. மேலும் நாட்டின் பொருளாதாரமானது முந்தைய ஆண்டுகளை விட தற்போது அதிக வேகமுடன் வளர்ச்சியடைந்திருக்கிறது என்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறினார்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN