சென்னை ஈவெரா சாலையில் மழைநீர் வடிகால் பணிகள் நடக்கவுள்ளதால் இன்று முதல் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ” புரசைவாக்கம் ஈவெரா பெரியார் சாலையில் நெடுஞ்சாலைத்துறையினர் ரித்தர்டன் சாலை சந்திப்பு அருகே சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் பணி மேற்கொள்ள உள்ளனர். இந்த பணிக்காக இன்று இரவு 10 மணி முதல் ஆகஸ்ட் 21 ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இதன்படி, அனைத்து வாகனங்களும் புரசைவாக்கம் ஈவெரா பெரியார் சாலையில் காந்தி இர்வின் மேம்பாலம் சந்திப்பில் இருந்து தாசபிரகாஷ் சந்திப்பை நோக்கி நேராக செல்ல அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சாலையில் வரும் வாகனங்கள் காந்தி இர்வின் மேம்பாலம் சந்திப்பில் இருந்து இடதுபுறம் திரும்பி காந்தி இர்வின் சாலை, எழும்பூர் ரெயில் நிலையம், அழகுமுத்துக்கோன் சிலை, உடுப்பி சந்திப்பு, நாயர் மேம்பாலம் வழியாக ஈவெரா பெரியார் சாலையை அடையலாம் என்று நெடுஞ்சாலைதுறை அறிவித்தது.
Also Read : நீங்களும் பேங்க்ல கடன் வாங்கிருக்கீங்களா..? அப்போ RBI அறிவித்த புதிய அறிவிப்பு உங்களுக்குத்தான்!!
மேலும், வாகனங்கள் ஈவெரா பெரியார் சாலையில் ரித்தர்டன் சாலை சந்திப்பில்லிருந்து ஈவிகே சம்பத் சாலை நோக்கி நேராக செல்ல அனுமதியில்லை. அதன் மாறாக சாலையில் வரும் வாகனங்கள் ஈவிகே சம்பத் சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, ஈவெரா பெரியார் சாலையில் ரித்தர்டன் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, ஈவெரா பெரியார் சாலை வழியாகச் செல்லலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.