வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்! பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள்…!

Today Latest News in Tamilnadu 2023

திருவண்ணாமலையில் அமைந்துள்ள தச்சம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில், தண்டராம்பட்டு வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. பழையனூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, பறையம்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராம் ஆகியோர் முன்னிலையில் நடத்தப்பட்ட இப்போட்டிக்கு, தச்சம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரம்மானந்தம் தலைமை தாங்கினார். இவ்விழாவை உடற்கல்வி ஆசிரியர் சிவப்பிரகாசம், வரவேற்பு உரையை கூறி தொடங்கி வைத்தார்.

தண்டராம்பட்டு வட்ட அளவிலான விளையாட்டு போட்டியில், 50-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும், வயதின் அடிப்படையில் கபடி போட்டிகள் நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகள் மட்டுமின்றி, உடற்கல்வி ஆசிரியர்கள் முகமது நபி, பாபு, சரவணன், கோவிந்தன், கிருஷ்ணமூர்த்தி, தண்டபாணி மற்றும் பல ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இப்போட்டிகள் முடிவடைந்த நிலையில், தச்சம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியின் சார்பாக வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து உடற்கல்வி ஆசிரியர் திவாகரன், இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.