RRB குரூப் D ஸ்கோர் கார்டு வெளியீடு!

RRB Group D Score Card 2022 Download: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் நடத்திய குரூப் D தேர்வின் ஸ்கோர் கார்டு தற்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

RRB Group D Score Card 2022 Download
RRB Group D Score Card 2022 Download

RRB குரூப் D கணினி அடிப்படையிலான தேர்வில் (Advt No. CEN RRC-01/2019) தேர்வெழுதிய அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் RRB-ஸ்கோர் சரிபார்ப்பதற்கான இணைப்பும் இப்பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

RRB குரூப் D ஸ்கோர் கார்டு:

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் (RRB) தற்போது வெளியான ஸ்கோர் கார்டு பதவி விவரங்கள் ட்ராக் மெயின்டெய்னர் கிரேடு-IV, உதவியாளர்/ உதவியாளர், உதவி புள்ளிகள், நிலை-I ஆகிய பணிகளுக்கு 103769 காலியிடங்கள் இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலம் வெளியிடப்பட்டது, இப்பணிக்கான தேர்வுகள் 17.08.2022 – 11.10.2022 ஆகிய நாட்களில் நடத்தப்பட்டது.

RRB குரூப் D-யில் உள்ள தகுதித் தேர்வுகள் கணினி அடிப்படையிலான தேர்வு, உடல் திறன் தேர்வு (PET), ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகிய படிநிலைகளில் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

கணினி அடிப்படையிலான தேர்வு டிசம்பர் 23ம் தேதி முடிவுகள் வெளியான நிலையில், இன்று தேர்வாளர்களின் ஸ்கோர் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. இதில், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சென்னை Region-க்கான (PET) உடல் திறன் தேர்வுகள் ஜனவரி 19 முதல் நடத்த உள்ளதாகவும், South Central Railway Region-க்கான உடல் தகுதி தேர்வு ஜனவரி 12 முதல் 21ம் தேதி வரையும், East Coast Railway Region-க்கு ஜனவரி 10 முதல் 12ம் தேதி வரை PET தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வின் ஸ்கோர் கார்டினை 27 டிசம்பர் 2022 அன்று முதல் 2023 ஜனவரி 1 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

DOWNLOAD SCORE CARD


RECENT POSTS IN JOBSTAMIL.IN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here