இரயில்வே தேர்வு பற்றிய முக்கிய அறிவிப்புகளை RRB வெளியிட்டது! மேலும் விவரங்கள்

0

RRB Attention Railway Exam Aspirants: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், RRB தேர்வுகள் அனைத்தும் மிகவும் நேர்மையாக நடத்தப்படுவதாகவும், பொய்யான தகவல்களை அளிக்கும் ஆட்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது. எந்தவிதமான முறைகேடுகளை தடுக்கவும் அகற்றவும் பல்வேறு பாதுகாப்பு அமைப்புக்கள் கொண்ட தனிப்பட்ட நிறுவனத்தின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

RRB Released Important Notifications About attention Railway Exam aspirants

RRB Released Important Notifications About attention Railway Exam aspirants
RRB Released Important Notifications About attention Railway Exam aspirants

RRB தேர்வுகளின் நிலை:

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் (RRBs) CEN RRC 01/2019 – லெவல் 1 (முந்தைய குரூப் D) தேர்வு நடந்து வருகிறது, இந்த பணிக்கான முதற்கட்டத் தேர்வுகள் கணினி அடிப்படையில் நடத்துவதற்கு மிகவும் புகழ்பெற்ற நிறுவனத்தை ஈடுபடுத்தியுள்ளது. 12 மண்டல இரயில்வேகளை உள்ளடக்கிய CBTயின் மூன்று கட்டத் தேர்வுகள் ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளன. நான்காவது கட்டம் செப்டம்பர் 19-ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.

தேர்வு மையங்கள் மற்றும் கண்காணிப்பு முறைகள்:

விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு மையங்கள், தேர்வு அறைகளில் உள்ள இருப்பிடங்கள் முதலியவை மிகுந்த கவனத்துடன் ஒதுக்கப்படுகிறது. மேலும் ஒரு அறையினுள் தேர்வு எழுத வரும் ஒவ்வொரு தேர்வர்க்கும் வழங்கப்படும் வினாத்தாள்களின் கேள்விகள் மற்றும் பதில்களின் வரிசைகள் மாற்றத்திற்கு உட்பட்டு இருக்கும், இதனால் தேர்வர்கள் யாருக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள் அளிக்கப்படாது. எனவே, ஒரு தேர்வர் பதில்களை தனது சைகையின் மூலம் மற்றொருவருக்கு வழங்க முடியும் என்று யாராவது கூறினால் அது முற்றிலும் தவறானது, ஆதாரமற்றது.

தேர்வுகள் சிசிடிவி கேமராக்களின் கடுமையான கண்காணிப்பின் கீழ் நடத்தப்பட்டு, ஒவ்வொரு தேர்வாளரின் முழு பதிவும் உள்ளது. இது தவிர, தேர்வர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், தேர்வுகள் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக தேர்வு நடத்தும் ஏஜென்சி பணியாளர்களை கண்காணிக்கவும் ரயில்வே ஒவ்வொரு மையத்திலும் தங்களுடைய சொந்த ஊழியர்களை நியமித்துள்ளது.

மோசடி எச்சரிக்கை:

சட்டவிரோதமான முறையில் பணி நியமனம் வழங்குவதாக போலியான வாக்குறுதிகளை அளித்து, மின்னணு மற்றும் அச்சு ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகளை கவனத்தில் கொள்ளாமல், இளைஞர்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் மோசடி நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு விண்ணப்பதாரர்கள் மீண்டும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 29 ஆகஸ்ட் 2022 அன்று RRBs இணையதளங்களில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் மூலம் RRB களால் இளைஞர்களுக்கு ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here