தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெண்களின் கல்வி மற்றும் அவர்களின் எதிர்க்காலத்தை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவற்றில் மிகவும் முக்கியமான திட்டம் என்றால் அது மகளிருக்கு மாதம் ரூ.1000 வழக்கும் திட்டம் தான். இந்த திட்டம் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணாவின் பிறந்த நாள் அன்று தொடங்கப்பட உள்ளது. இந்த மகளிர் உரிமை திட்டம் ஆனது, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் வகையில் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமை கடந்த மாதம் 24 ஆம் தேதியில் தர்மபுரி மாவட்டத்தில் தமிழக முதல்வர் தொடங்கிவைத்தார். இந்த விண்ணப்பப்பதிவு முகாம்கள் 2 கட்டமாக நடத்தப்பட்டது. இரண்டு கட்ட முகாம்களும் நிறைவுபெற்ற நிலையில், இதுவரை மொத்தம் 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இவற்றில் தகுதியானர்வகளை தேர்வு செய்யும் பணி தற்பொழுது நடைபெற்று வருகிறது.
Also Read : தமிழகத்தில் மீன்பிடி தடைகால நிவாரண தொகை அதிரடி உயர்வு..! சற்றுமுன் தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை!!
இதையடுத்து, மகளிர் உரிமைத்தொகை திட்டமானது 1 கோடி மகளிருக்கு மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், தற்பொழுது 1 கோடிக்கும் அதிகமானோர் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டால் அரசு உரிமைத்தொகை வழங்காதா என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில், குறித்து தமிழக முதல்வர் முக்கிய தளர்வு ஒன்றை அறிவித்துள்ளார். அதன்படி, தகுதியானவர்கள் எண்ணிக்கை ஒரு கோடிக்கு அதிகமாக சென்றால் அரசு அதற்கு மேலும் நிதி ஒதுக்கும் என முதல்வர் அறிவித்துள்ளார்.