புதுமைபெண் திட்டத்தில் இத்தனை ஆயிரம் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000.. அமைச்சர் உதயநிதி பேச்சு..!

Rs.1000 per month for 1000 students in Pudumaiben program Minister Udayanidhis speech

தஞ்சை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கு நடைபெற்றது. இதில், பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்குபின் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தஞ்சை மாட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவுத்துறை சார்பில் விவசாயிகளுக்கு ரூ.1 கோடியே 60 லட்சத்து 78 ஆயிரம் மானியமாக வழங்கப்பட்டது. .மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி நேரடி கடனாக 106 குழுக்களைச் சேர்ந்த 1,696 உறுப்பினர்களுக்கு ரூ.5 கோடியே 86 லட்சம் மற்றும் 18 ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பிற்கு ரூ.7 கோடியே 26 லட்சம் மதிப்பில் கடன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகை வழங்கும் ‘புதுமைப்பெண் திட்டம்’ தமிழ்நாட்டில் செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ந் தேதி டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் சுமார் 7 ஆயிரத்து 210 மாணவர்கள் பயன் அடைந்து வருகின்றனர் என்று கூறினார்.

RECENT POSTS IN JOBSTAMIL.IN