இன்னும் ஒரு சில மாதங்களில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000… அமைச்சர் தங்கம் தென்னரசு சற்றுமுன் வெளியிட்ட புதிய அறிவிப்பு..!

In a few months Rs.1000 per month for the head of the family Minister Thangam has announced a new announcement made by the South Government

திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமை தொகை மாதந்தோறும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. கடந்த பட்ஜெட்டிலும் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை. பொருளாதார ரீதியாக அரசுக்கு இருக்கும் சில சிக்கலால் இந்த திட்டம் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் போது, நடப்பாண்டுக்கான பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தைகை வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், இன்னும் 3 அல்லது 4 மாதத்தில் மகளிருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் இதற்கான நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

RECENT POSTS IN JOBSTAMIL.IN