ரேஷன் அட்டைக்கு ரூ.1000 வழங்கபப்டும்! முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

0
Rs.1000 will be provided for the ration card! Chief Minister M.K. Stalin's announcement-CM Stalin To Give 1000 Rupees On ration Card Holder

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் இலங்கை கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக கடலூர், மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளையும், ஆயிரக்கணக்கான விளை நிலங்களையும் வெள்ளம் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி தரங்கம்பாடி வட்டங்களில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வு செய்த பின்னர் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட இடங்களில் இருக்கும் குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மழையினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை முறையாக கணக்கெடுப்பு செய்யப்பட்டு, உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here