மிகஜ்ம் புயலால் பாதிக்கபட்ட மக்களுக்கு ரூ.2,500 நிவாரணத்தொகை – ஆந்திர முதல்வரின் அதிரடி அறிவிப்பு

Rs.2500 compensation for the people affected by the mega storm announcement by Andhra Chief Minister

வங்கக்கடலில் கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு “மிக்ஜம்” என்றும் பெயரிடப்பட்டது. இந்த மிக்ஜம் புயலானது சென்னையை ஒரு புரட்டு புரட்டி எடுத்தது. ஏனென்றால், அந்த அளவிற்கு மிக்ஜம் புயலின் தாக்கம் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மிக்ஜம் புயலானது கடந்த 4 ஆம் தேதி நெல்லூர்- மசூலிப்பட்டினம் பகுதியில் கரையை கடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென ஆந்திர பகுதியை நோக்கி நகர்ந்தது. இந்த மிக்ஜம் புயலால் ஆந்திராவில் உள்ள 10 மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கபட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன் அதிக இழப்புகளும் ஏற்பட்டுள்ளது.

ALSO READ : மீண்டும் அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ்..! அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்!!

இதனையடுத்து, ஆந்திராவில் மிகஜ்ம் புயலால் பாதிக்கபட்ட இடங்களை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புயலால் பாதிக்கபட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான உணவு, குடிநீர், மின்சாரம் போன்றவற்றை உடனடியாக வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூபாய் 2500 வெள்ள நிவாரண தொகை வாங்கப்படும் என்றும் அறிவித்தார்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top