ஒடிசாவில் நடந்த கோர ரயில் விபத்து..! நடந்தது என்ன? முழு விவரங்களுடன்…

sad news Horrible train accident in Odisha what happened With full details here click now

பொதுமக்களின் பயணங்களை எளிதாக்கவும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விரைந்து செல்வதற்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டது. அந்த வகையில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் என்ற பெயருடைய ரயிலானது நேற்று கொல்கத்தாவிலிருந்து சென்னை வருவதற்காக புறப்பட்டது. இந்த ரயிலானது நேற்று பிற்பகல் 3.20 மணிக்கு புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையத்தை கடந்து வந்து கொண்டிருந்தது.

அப்பொழுது பாஹநகர் பஜார் நிலையம் அருகே பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டுள்ளது. விபத்துக்குள்ளான இந்த ரயிலின் பெட்டிகள் அருகே இருந்த தண்டவாளத்தில் கவிழ்ந்தன. அருகில் இருந்த தண்டவாளத்தில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், தடம்புரண்ட கிடந்த பெங்களூரு- ஹவுரா ரயிலின் பெட்டிகள் மீது மோதியது. இதை அறியாமல் சிறிது நேரத்தில் அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில், ஏற்கெனவே விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் மீது பயங்கரமாக மோதி, அதன் பெட்டிகளும் தடம் புரண்டன.

இதையடுத்து, ரயில்களின் பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி பெருத்த சேதம் அடைந்தன. இந்த விபத்தில் 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டள்ளது. மேலும், இந்த விபத்தானது நாட்டையே உலுக்கி போட்டுள்ளது. வரலாற்றில் மிக மோசமான ரயில் விபத்துக்களில் இது ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த கோர விபத்துக்கு தமிழக முதலமைச்சர் போன்ற பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்களை தெரிவித்துள்ளனர்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN