சேலம் மார்டன் தியேட்டர்: ” மலரும் நினைவுகள்” முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் டுவிட்…

Salem Morton Theatre Blooming Memories Chief Minister M.K. Stalin Tweet-Salem Morden Theatres

கடந்த ஜனவரி மாதம் 1-ம் தேதி ‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டம் தொடங்கப்பட்டது. இதன் முதல் நிகழ்ச்சியாக வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இந்த நிலையில் 2-ம் கட்டமாக சேலம் மண்டலத்தில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இரண்டாவது நாளான இன்றும் முதலமைச்சர் நேரடி கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் கள ஆய்வில் பங்கேற்றுள்ளனர். அப்போது, முதல்வர் மு.க. ஸ்டாலினின் தந்தையும் மறைந்த முதல்வருமான கலைஞரின் நினைவாக அவர் திரைப்பட வசனம் எழுதிய சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு வாயில் முன்பு முதல்வர் செல்ஃபி எடுத்துக் கொண்டது சமூக வலைத்தளங்களில் வெகுவாக கவனம் ஈர்த்துள்ளது.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிபிட்டுள்ள பதிவில், சேலம் கள ஆய்வின்போது வழியில் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு வாயிலைப் பார்த்ததும் வாகனத்தை நிறுத்தச் சொன்னேன். திராவிட இயக்கக் கலைஞர்களின் தொட்டில். முத்தமிழறிஞர் கலைஞரின் பேனா முனை தீட்டிய கூர்மிகு வசனங்களின் பிறப்பிடமான அந்த சேலம் மாடர்ன் தியேட்டர்ஸின் நுழைவு வாயிலைப் படம் பிடித்தேன். 9 மொழிகளில் 118 படங்களைத் தயாரித்து, அழியாக் கலைப்படங்களை உருவாக்கிய அந்நிறுவனத்தின் இந்த நுழைவு வாயில் பல நினைவுகளைச் சுமந்து நிற்கும் பெருஞ்சுவர் என்று பதிவு செய்துள்ளார்.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here