சம்பா-தாளடி நெற்பயிர் காப்பீட்டு அவகாசத்தை நீடிக்க வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

காவிரி டெல்டா மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் எதிர்பார்த்த மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் தங்களின் சம்பா மற்றும் நெற்பயிர் சாகுபடி பணிகளை தாமதமாக தொடங்கி உள்ளனர். இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தனது எக்ஸ் வலைத்தளத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அவர் வெளியிட்ட வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியது:

“சம்பா மற்றும் தாளடி நெற்பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நாளை முடிவடைய உள்ள நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

டெல்டா மாவட்டங்களில் எதிர்பார்த்த மழைப்பொழிவு இல்லாத காரணத்தினாலும், அதோடு காவேரி ஆற்றில் இருந்து உரிய நீரை பெற முடியாத காரணத்தினாலும் அங்கு உள்ள பெரும்பாலான விவசாயிகள் தங்களின் சம்பா மற்றும் நெற்பயிர் சாகுபடி பணிகளை தாமதமாக தொடங்கி உள்ளனர்.

ALSO READ : மோகன்லால் நடிக்கும் “லூசிபர் 2” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!

தீபாவளி பண்டிகை காலம், இணைய சேவை மையங்களில் தொழில்நுட்ப கோளாறு போன்ற காரணத்தினால் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர் காப்பீட்டை இதுவரை 60 முதல் 70 சதவிகிதம் வரையிலான விவசாயிகள் மட்டுமே செய்து உள்ளனர் என்று கூறப்படுகிறது.

எனவே, தமிழக அரசு நமது நாட்டின் உணவுத்தேவையை பெருமளவு பூர்த்தி செய்யும் காவிரி பாசன பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சம்பா மற்றும் தாளடி நெற்பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் அந்த செய்தி குறிப்பில் கூறினார்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்