சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் விழா அவரது உருவப்படத்திற்கு மரியாதை @ ஜனாதிபதி

குஜராத் மாநிலத்தில் பிறந்த சர்தார் வல்லபாய் படேல் இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியாக இருந்தார். இவரை அனைவரும் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுவர். இவரது பிறந்தநாளை தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, சர்தார் வல்லபாய் படேல் 550-க்கும் அதிகமான குறுநில அரசுகளை இந்தியாவுடன் இணைத்தார். அதுமட்டுமல்லாமல், கடைசிவரை இணைய மறுத்த ஐதராபாத் நிஜாம், ஜூனாகத்(குஜராத்) நவாப் ஆகியோரை தனது வல்லமையால் இந்தியாவுடன் இணைய வைத்தார். இவரது 147-வது பிறந்த நாள் அக்டோபர் 31 ஆம் தேதி (இன்று) கொண்டாடப்படுகிறது.

சர்தார் வல்லபாய் படேலின் நினைவாக அவரது சொந்த ஊரிலேயே சிலை கட்டப்பட்டுள்ளது. இவரது பிறந்த நாளை தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுவதால், இந்த சிலைக்கு ஒற்றுமைக்கான சிலை என பெயரிடப்பட்டுள்ளது. இவரது சிலையை குஜராத் மாநிலம் நர்மதை மாவட்டத்தின் கெவாடியா என்ற கிராமத்தில் நர்மதை நதிக்கரையோரம் 182 மீட்டரும், 597 அடி உயரத்தில் மிகவும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட இந்த சிலை உலகத்தின் மிக உயரமான சிலையாக கருதப்படுகிறது.

இந்நிலையில், சர்தார் வல்லபாய் படேலின் 147-வது பிறந்த நாளான இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு படேலின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிழல்ச்சியில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தங்கர், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, டெல்லி லெப்டினன்ட் கவர்னர் வினய் குமார் சக்சேனா மற்றும் மத்திய மந்திரி மீனாட்சி லேகி உள்ளிட்டோர் கலந்து கொண்டு அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here