
வங்கி வேலைக்காக வெயிட் பன்றவங்க இந்த வாய்ப்பை யூஸ் பண்ணிக்கோங்க. பாரத ஸ்டேட் வங்கி தற்போது மீண்டும் ஒரு வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு கொண்டிருக்கிற வங்கி தான் SBI. கல்வித்தகுதி, வயது, பணியிடம், காலியிடங்களின் எண்ணிக்கை போன்ற அனைத்து விவரங்களையும் இந்த பக்கத்தில் தொகுத்து வழங்கியுள்ளோம். முழுமையான விவரங்களை அறிந்துகொண்டு உங்கள் தகுதிக்கேற்ப உடனே விண்ணப்பிக்க விரையுங்கள்.
பாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்
SBI வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, Manager, Deputy Manager, Chief General Manager, Data Analyst பணிக்கு 47 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்படும் நபர்கள் இந்தியா முழுவதும் பணி செய்ய வாய்ப்பு வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் B.E, B.Tech, Diploma, MBA, M.Sc, Graduate படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருத்தல் அவசியம். Deputy Manager (Security)/Manager (Security) பணிக்கு 25 – 40 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். CGM & Deputy Chief Digital Officer (DB&T) பணிக்கு 45 – 62 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். Data Analyst பணிக்கு 25 – 35 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ALSO READ : Pondicherry Universityயில் அருமையான வேலைவாய்ப்பு!
மேலும், பாரத ஸ்டேட் வங்கி பணிக்கு ஆன்லைன்ல அப்ளை பண்ணிக்கலாம். இதற்கு, SC/ST/PwBD விண்ணப்பதாரர்கள் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. General/EWS/OBC விண்ணப்பதாரர்கள் 750 ரூபாய் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.இந்தியா முழுவதும் வேலை செய்ய 48170 ரூபாய் முதல் 78230 ரூபாய் வரை மாத சம்பளமாக வாங்கி கொள்ளலாம்.
விண்ணப்பத்தாரர்களை Qualification, Experience & Interview முறையில் SBI வங்கி தேர்வு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் 7 நவம்பர் 2023 முதல் 27 நவம்பர் 2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க விரையுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து அறிந்துகொள்ளுங்கள்.
Notification For Deputy Manager(Security) / Manager (Security) pdf
Notification for Data Analyst Posts
Notification for CGM & Deputy Chief Digital Officer (DB&T) Posts
Apply Online for CGM & Deputy Chief Digital Officer (DB&T) Posts
Apply Online for Data Analyst Posts