சுட்டெரிக்கும் வெயில்… மக்கள் வெளியே வர வேண்டாம்..! வானிலை ஆய்வு மையத்தின் புதிய எச்சரிக்கை!!

Scorching sun People dont come out Meteorological Centers new warning read it now

தமிழகம் முழுவதும் அக்னி வெயிலானது கடந்த ஏப்ரல் மாதம் 4 -ம் தேதியிலிருந்து ஆரம்பித்தது. ஆனால் வங்கக் கடல் பகுதியில் உருவாகியிருந்த மோக்க புயல் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த வாரங்களிலெல்லாம் பரவலான மழை பெய்திருந்தன. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்ததிருந்தது. எனவே மக்களுக்கும் இந்த மழை வெயிலைத் தணித்துகொள்ளுவதற்கு ஏதுவாக இருந்தது.

ஆனாலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்பத்தின் அளவு 105 டிகிரி ஃபாரன்ஹீட்டைக் கடந்து பதிவாகியது. இதனையடுத்து தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களில் வெயிலின் தாக்கம் மறுபடியும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றது. இதனால் மக்கள் வெளியில் வருவதற்கு தயங்குகின்றனர்.

அதனையடுத்து வானிலை ஆய்வு மையமானது ஒரு புதிய எச்சரிக்கையை அறிவித்துள்ளது. அதாவது இன்று வெயிலின் தாக்கமானது இயல்பைவிட 3 டிகிரி வரை அதிகரிக்கக் கூடும் ; எனவே இன்று தமிழகங்களில் உள்ள பல இடங்களில் வெயில் சுட்டெரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வானிலை ஆய்வு மையமானது ஒரு புதிய மகிழ்ச்சியான செய்தியையும் அறிவித்திருக்கிறது. அதாவது வெயில் வாட்டி எடுத்தாலும் இன்றும் நாளையும் (16,17ஆகிய தேதிகளில் )தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையாக இடிமின்னலுடன் பெய்ய வாய்ப்பு இருக்கின்றது. அதனையடுத்து வெப்பநிலையின் அளவானது இன்று இயல்பான அளவை விட 2 லிருந்து 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக காணப்படக்கூடும்.

தொடர்ந்து லேசானதிலிருந்து மிதமான மழை வரை 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் அடுத்த 48 மணி நேரத்துக்கு சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். அத்துடன் வெப்பநிலை அளவு 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை அதிகபட்சத்துடன் இருக்கும். தொடர்ந்து குறைந்த பட்ச அளவாக 29 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாது அதிக ஈரப்பதம் மற்றும் அதிக வெப்பநிலையின்போது வெப்ப அழுத்தத்தினால் அசவுகரியம் உருவாக வாய்ப்பிருக்கிறது என்றும் கூறப்பட்டிருக்கின்றது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN