கவர்மெண்ட் ஆபீசுல தினமும் ஒரு திருக்குறளா? என்னடா இது புதுசா இருக்கு… முழு விவரங்களுடன்…

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் திருக்குறளின் முக்கியத்துவத்தை தெரிவிக்கும் வகையில் தலைமைச் செயலாளராக உள்ள இறையன்பு உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறார். இதுத் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழ்நாட்டின் அனைத்து அரசு தலைமை அலுவலகங்களிலும் தமிழ் கலைச் சொல் மற்றும் திருக்குறள் ஆகியவற்றின் சிறப்புகளை விளக்கும் வகையில் அதனை கரும்பலைகளில் எழுதப்பட வேண்டும். மேலும் தமிழ் ஆட்சி சொல் அகராதியில் உள்ள சொற்களில் தினமும் ஒரு ஆங்கில சொல் மற்றும் அதற்கான தமிழ் சொற்களையும் அங்குள்ள கரும்பலகையில் எழுதிவைக்கபட்டிருக்க வேண்டும். அதாவது மாநிலத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் தன்னாட்சி நிறுவனங்கள், கழகங்கள் இணையங்கள், மற்றும் தலைமைச் செயலகத் துறைகள் போன்றவற்றின் தலைமை அலுவலகங்களில் காணும் வகையில் எழுதியிருக்க வேண்டும். அதுமட்டுமல்லாது அதனுடன் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு திருக்குறளை அதன் பொருளுடன் எழுதப்பட வேண்டும்.

sema news Is it a daily grind in a government office Wow this is new...with full details here

இவற்றிற்கு எல்லாம் மேற்கூரியவாறு அரசாணையில் அறிவுறுத்தியதற்கு ஏற்றவாறு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் திருக்குறளின் முப்பாக்களில் அறத்துப்பால், பொருட்பால் ஆகிய அதிகாரங்களில் அதன் பொருளுடன் எழுதப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல் தமிழ் ஆட்சிச் சொல் அகராதியில் உள்ள சொற்களில் ஒரு ஆங்கில சொல்லை அதற்கேற்ற தமிழ் சொல்லுடன் அனைத்து அலுவலகங்களில் உள்ள கரும்பலகை வெள்ளை பலகையிலும் 4×3 என்ற அளவுடன் தினந்தோறும் எழுதி வைக்கப்பட வேண்டும்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர்கள், அரசு கழகங்கள், வாரியங்களின் தலைவர்கள், துறைத் தலைமை அலுவலர்கள், பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் அனைத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர்கள் முதன்மை செயலாளர்கள்/ செயலாளர்கள் போன்றவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளலாம். இதையடுத்து தமிழ் வளர்ச்சித் துறை தமிழ் வளர்ச்சி மண்டல துணை இயக்குநர் / மாவட்ட நிலை அலுவலர்கள் ஆகியவர்களிடம் மேற்சொன்ன பணிகள் அனைத்தையும் நடைபெறுகிறதை கண்காணித்து அதற்குரிய அறிக்கைகளை அரசுக்கு அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருக்கின்றது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN