செம்ம! தமிழ்நாடு அரசின் காலை உணவு திட்டம் – அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!

தமிழகத்தில் முதன்முறையாக பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை அப்போதைய முதல் அமைச்சர் திரு காமராஜர் அவர்களால் கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசு தற்போது காலை உணவு சிற்றுண்டி திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது.

செம்ம! தமிழ்நாடு அரசின் காலை உணவு திட்டம் - அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!

தமிழகத்தில் தற்போது மு.க.ஸ்டாலின் தலைமயிலான தி.மு.க கட்சி ஆட்சி நடக்கின்றது. இக்கட்சி ஆட்சிக்கு வரும் முன்னர் தேர்தல் வாக்குறுதியின்போது பள்ளிகளில் காலையிலும் சிற்றுண்டி அளிக்கப்படுவதாக தெரிவித்தது.

இந்த நிலையில் பள்ளிகளில்1 முதல் 5ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு காலையில் சிற்றுண்டி அளிக்கப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தது. இதைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முதன் முதலாக மதுரையில் உள்ள ஒரு அரசுபள்ளியில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து இத்திட்டமானது தமிழகமெங்கும் உள்ள அரசுப்பள்ளிகளில் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது.

மேலும் சுய உதவிக் குழு உறுப்பினர்களை சிற்றுண்டிக்கான சமையல் வேலைகளை செய்யும்படி நியமிக்க அரசு ஏற்பாடு செய்யும். அதனையடுத்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பணிக்கான உறுப்பினர்களை நியமிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்திருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

  • உணவு தயார் செய்யும் பணிக்கு அனைத்து பள்ளிகளிலும் ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சியில் உள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்யப்பட வேண்டும். மேலும் உணவு தயாரிப்பதில் ஆர்வம் கொண்டவராகவும் மற்றும் 10ம் வகுப்பு அல்லது அதற்கு மேல் கல்வித்தகுதி உடையவராகவும் இருத்தல் வேண்டும். ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி அமைந்திருக்கும் அதே பகுதியில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். தொடர்ந்து 3 வருடங்கள் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாது தேர்வு செய்யப்படும் நபர்கள் தன்னுடைய பெயரில் ஆண்ட்ராய்டு போன் அல்லது ஸ்மார்ட் போன் வைத்திருப்பவராக இருக்க வேண்டும். மேலும் காலை உணவு தயார் செய்யும் பள்ளியில் தன்னுடைய மகனோ அல்லது மகளோ படிப்பவராக இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN