முதன்முதலில் அமெரிக்க செல்லும் அரசு பள்ளி மாணவி இவர்தான்!! சற்றுமுன் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய செய்தி..!

She is the first government school girl to go to America The important news released by the Department of School Education

தமிழக அரசு மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல், கல்வியில் மட்டுமல்லாமல் பல்வேறு அவர்களின் தனித்திறமைகளையும் வெளிகொண்டு வருவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், சமீபத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்காக கலைத்திருவிழா நடத்தப்பட்டது. இந்த கலைத்திருவிழாவில் ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று அவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு அவர்களின் கலை திறமையை ஊக்குவிப்பதற்காக இலக்கிய மன்றம், சிறார் திரைப்படம் இயக்குதல், வானவில் மன்றம், வினாடி-வினா தொடர்பாக பள்ளி அளவிலும் மற்றும் ஒன்றிய, மாவட்ட, மாநில அளவிலும் போட்டிகள் நடைபெற்றன.

இதில், சிறார் திரைப்படம் இயக்கம் போட்டியில் தனிநபர் மற்றும் குழு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் திண்டுக்கல் மாவட்டம் குரும்பபட்டியில் உள்ள நடுநிலை பள்ளியில் பயிலும் 7 ஆம் வகுப்பு கீர்த்தனா என்ற மாணவி உள்பட 14 பேர் கொண்ட குழு முதலிடம் பிடித்தது. இதில் முதலிடம் பிடிக்கும் மாணவ மாணவிகள் வெளிநாடு செல்லும் வாய்ப்பு வழங்கப்படும் என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், கீர்த்தனா உள்பட14 பெரும் அமெரிக்கா செல்ல உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN