குழந்தைகளை தூக்கி வீசும் அதிர்ச்சி சி.சி.டி.வி காட்சிகள்..!

Shocking CCTV footage of children being thrown away

பொதுவாக பள்ளிகளில் மாணவர்கள் ஏதாவது தவறு செய்யும் பட்சத்தில் அதனை ஆசிரியர்கள் கண்டிப்பது வழக்கம். ஆனால் மராட்டிய மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த சம்பவம் ஒன்று பெற்றோர்களை அச்சப்பட வைத்துள்ளது.

மாராட்டிய மாநிலத்தில் ஒரு மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் ஒரு சிறுவனின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டு இருந்தது. அதாவது அந்த சிறுவன் யாரை பார்த்தாலும் பயந்து கொண்டே இருந்தான். இதனை அறிந்த அந்த சிறுவனின் பெற்றோர் அதுகுறித்து விசாரித்தனர்.

அப்போது, அந்த சிறுவன் தான் படிக்கும் பள்ளியில் குழந்தைகளை ஆசிரியர்கள் துன்புறுத்தி அடிக்கிறார்கள் என்று கூறினான். இதனை அறிந்த அந்த பொற்றோர் பள்ளியில் உள்ள சி.சி.டி.வி கேமராவை சோதனை செய்தனர்.

அந்த சி.சி.டி.வி கேமராவில் ஆசிரியர்கள் குழந்தைகளை தூக்கி வீசுவதும் அடிப்பதும் பதிவாகி இருந்தது. இந்த சம்பவத்தை பார்த்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் ஆசிரியர்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

RECENT POSTS IN JOBSTAMIL.IN