அதிர்ச்சி தகவல்..! உலக பணக்காரர்கள் பட்டியலில் அதாணி எத்தனையாவது இடம்தெரியுமா?

Shocking information How many places will Adhani appear in the list of the world's richest people-In Global Billionaries List

உலக பணக்காரர்களில் முதல் மூன்று இடத்தில் ஒருவராக இருந்தவர் அதானி. இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே அதானி பங்குகள் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி உலக பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து சரிந்துகொண்டே வருகிறார். இதையடுத்து, உலக பணக்காரர்கள் பட்டியலில் 3ஆம் இடத்தில் இருந்த கவுதம் அதானி இப்போது 24 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்த சூழ்நிலையில், அதானி குழுமம் கணக்கு மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பர்க் ஆய்வு நிறுவனம் ஜனவரி 24 ஆம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதையடுத்து, அதானி குழுமத்தின் அனைத்து பங்குகளுமே மிக மோசமாக சரிந்து வருகின்றன. இன்று மட்டும் அதானி எண்டர்பிரைசஸ் பங்கு 35% வரை சரிந்துவிட்டது. ஹிண்டென்பர்க் அறிக்கை வெளியான பிறகு மட்டும் அதானி எண்டர்பிரைசஸ் பங்கு சுமார் 70% மேல் சரிந்துவிட்டது.

நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 5 சதவீத பங்குகள் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.50,000 கோடியாகும். இதனால் உலக பணக்கார பட்டியலில் 3 ஆம் இடத்தில் இருந்த அதாணி கிடுகிடுவென குறைந்து 24 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here