அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர வேண்டுமா? முக்கிய அறிவிப்பு வெளியானது! உடனே பாருங்க…

Education News

சென்னை, ஜூன் 17

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், முதலாமாண்டு டிப்ளமோ மாணவர் சேர்க்கைக்கு, ஜூலை 1 முதல் விண்ணப்பப் பதிவு துவங்க உள்ளது.

தமிழகம் முழுவதும், 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், 17 ஆயிரத்து 935 டிப்ளமோ இடங்கள்; அரசு நிதியுதவி பெறும் 34 கல்லூரிகளில், 14 ஆயிரம் இடங்கள்; 405 சுயநிதி கல்லூரிகளில், 1.35 லட்சம் இடங்கள் என, மொத்தம் 1.67 லட்சம் இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

இதில், 10 ஆம் வகுப்பு முடித்தோர் முதலாம் ஆண்டிலும், பிளஸ் 2 முடித்தோர் இரண்டாம் ஆண்டிலும் சேரலாம். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு, அரசின் கவுன்சிலிங் வழியே மாணவர்கள் சேர்க்கப்படுவர். மற்ற கல்லூரிகளில், நிர்வாகமே நேரடி சேர்க்கையை நடத்தும்.

முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ‘ஆன்லைன்’ விண்ணப்ப பதிவு, ஜூலை 1ல் துவங்கும் என, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. இதற்கான விபரம் வரும் 30ம் தேதி, ஆன்லைன் தளத்தில் அறிவிக்கப்படும்.

இதில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், ஜூலை 15க்குள் ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க வேண்டும். சிறப்பு பிரிவு மற்றும் விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங், ஜூலை 22; பொது ஒதுக்கீட்டு பிரிவு மாணவர்களுக்கு, ஜூலை 29 முதல் கவுன்சிலிங் நடத்தப்படும் என, தொழிநுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, டிப்ளமோ படிப்பில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு, ஜூன் 23ல் ஆன்லைன் பதிவு துவங்க உள்ளது. ஜூலை 8 வரை பதிவு செய்யலாம்.

இதற்கான விதிகள் மற்றும் கல்வி தகுதி விபரங்கள், வரும் 22ம் தேதி வெளியாகும் என, உயர்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source Link


பொறுப்பு துறப்பு:

மேலே கொடுப்பட்டுள்ள தகவல்கள் அல்லது செய்திகள் எங்களுடைய ஜாப்ஸ் தமிழ் குழுவினரால், அதன் உண்மை தன்மையை நன்கு ஆராயப்பட்டு பதிவிடப்படுகிறது. வெளியிடப்படும் படைப்புகள் அனைத்தும் வாசகர்களின் புரிதல், பயன்பாட்டிற்காக மட்டுமே. மற்றவர்களுடைய அறிவுசார் குறியீட்டுகளை மீறும் (Copyright Violation) நோக்கம் இல்லை. எனவே, நாங்கள் எந்த விதமான காப்புரிமையும் கோரவில்லை. தகவல் அனைத்தும் Fair Use Policy அடிப்படையில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு அதன் மூல இணைப்பை (Source Link) கொடுத்துள்ளோம். இருப்பினும், உங்களுக்கு ஜாப்ஸ் தமிழ் இணையதளத்தின் செய்திகள், கட்டுரைகள், வேலை வாய்ப்பு செய்திகள் மற்றும் படங்களின் மீது ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் [email protected] என்ற முகவரிக்கு இமெயில் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button