Home NEWS ரேஷன் கார்டுடன் இதையும் இணைக்கனுமா? உடனடி உத்தரவு..!

ரேஷன் கார்டுடன் இதையும் இணைக்கனுமா? உடனடி உத்தரவு..!

0
Should I link this with the ration card Immediate order-To Link In Ration Card And Aavin Monthly Card

தமிழகத்தில் பால் விற்பனை என்றாலே முதலில் நியாபகத்தில் வருவது ஆவின் பால் தான். அந்த வகையில், ஆவின் பால் நிறுவனம் தினசரி 40 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்கின்றனர். இதில் பாக்கெட் நிறத்திற்கேற்ப பால் வகைப்படுத்தபடுவது வழக்கம்.

அந்த வகையில், கொழுப்பு சத்து அடிப்படையில் பிரிக்கப்பட்டு, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மற்றும் நீலநிற பாக்கெட்டுகளில் விற்கப்படுகிறது. சில்லறை விற்பனையில் விற்கப்படும் நிறைகொழுப்பு (ஆரஞ்சு நிற பாக்கெட்) பாலின் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.60 என்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சிவப்பு பாக்கெட்டின் விலை ரூ.76 க்கு விற்கப்படுகிறது. அதுவே மாதாந்திர அட்டைதாரர்களுக்கு ரூ.46-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆரஞ்சு நிற பாக்கெட் பாலை சிலர் மாதாந்திர அட்டையில் வாங்கி வணிக ரீதியாக விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, ஆவின் மாதாந்திர அட்டையுடன் ரேஷன் அட்டையை இணைக்கும் பணியை ஆவின் நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

இதற்கான பணியை 27 மண்டலங்களில் இணையதளம் மூலமாக நடைபெற்று வருவதாகவும், இதன் மூலம் முறைகேடுகளை தவிர்க்க முடியும் எனவும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

RECENT POSTS

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here