Home பொறியியல் இந்த இடத்திற்கு போகக்கூடாது? தமிழக அரசு உத்தரவு..!

இந்த இடத்திற்கு போகக்கூடாது? தமிழக அரசு உத்தரவு..!

0
Shouldn't go to this place Tamilnadu government order-Fishman Should Not Go For Sea

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த பருவமழை தொடக்கத்தால் தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்து வந்தது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் மற்றும் கடலோர பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், வருகிற 18 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் 45 கி.மீ முதல் 65 கி.மீ வரை கடலில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மீன்வளத்துறை அறிவுறுத்தலின்படி, தமிழக அரசு நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளது. ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் உள்ள மீனவர்களை தொடர்பு கொண்டு அருகில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறைந்த காற்றலுத்த தாழ்வுபகுதி காரணமாக கடலேர பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

RECENT POSTS

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here