காவல் துறை உதவி ஆய்வாளர்கள் பணிகளுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் இன்று தொடங்கி உள்ளனர். தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் மூலமாக காவல் உதவி ஆய்வாளர்கள் 750 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு 45 மையங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு காலை 10 மணிக்கு துவங்கி 12.30 மணிக்கு நிறைவடைந்தன.
இதற்காக தேர்வர்கள் அனைவரும் 8.30 மணிக்கு தேர்வு மையத்தில் இருந்தார்கள். இதன்பிறகு, ஹால் டிக்கெட் சோதனை என்று கடும் சோதனைகளுக்கு பிறகு தான் தேர்வு எழுதும் அறைக்குள் அனுமதிக்கப்ப்பட்டார்கள். தேர்வு முடிந்தவுடன் இன்று மதியம் 2 மணிக்கு தமிழ் தகுதி தேர்வும் குறிபிட்ட தேர்வர்களுக்கு நடைபெற்றது.
Also Read : பெற்றோர்களின் கவனத்திற்கு… இனிமே உங்க குழந்தைகளை இந்த வயசுலதான் ஸ்கூல செத்தனுமாம்!! புதிய கல்வி கொள்கை அமல்!