Home Festivals தீபாவளிக்கு விளக்கேற்றுவதில் இவ்வளவு நன்மைகளா?

தீபாவளிக்கு விளக்கேற்றுவதில் இவ்வளவு நன்மைகளா?

0

உலகம் முழுவதும் உள்ள அனைத்து மதத்தினராலும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. பல்வேறு இடங்களில், அந்தந்த இடத்திற்கேற்ப பல பெயர்களில் பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது. வழக்கம் போல் தீபாவளி அமாவாசை நாளன்றுதான் வரும். ஆனால் சில ஆண்டுகளில் மட்டும் தீபாவளிக்கு அடுத்த நாள் அமாவாசை வரும். அதேபோல்தான் இந்த ஆண்டும் தீபாவளிக்கு அடுத்தநாள் அமாவசை வருகிறது.

So many benefits of lighting up Diwali 2022 Details

So many benefits of Diwali lighting-Diwali 2022 Details
So many benefits of lighting up Diwali 2022 Details

தீபாவளி என்றாலே தீபங்கள் நிறைந்த ஒளி என்று அர்த்தமாகும். இதனால்தான் தீபாவளி நாளன்று பூஜை அறையில் தீபங்களை ஏற்றி வீட்டில் உள்ள மின் விளக்குகளை எல்லாம் அணைத்து விட்டு நாம் வழிபடும்போது அந்த தீப ஒளியில் இறைவனை காணலாம் என்பதே இதற்கான விளக்கம் ஆகும். பொதுவாக விளக்குகள் நம்முடைய ஆன்மாவைக் குறிப்பதாக ஒரு நம்பிக்கை உண்டு. தீபங்கள் ஏற்றுவதன் மூலம் வீட்டிலும் நம் மனதினலும் உள்ள எதிர்மறை விஷயங்களை அகற்றி, நேர்மறை எண்ணங்கள், நல்லவை வீட்டுக்குள்ளும் மனதுக்குள்ளும் நுழையும் என்பது ஐதீகம்.

தீபாவளி பண்டிகையை அமாவாசை நாளில் கொண்டாடபடுவதால் அன்று இரவின் இருளைப் போக்கவும், ஒளியை அளிக்கவும் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. விளக்கேற்றுவதற்கென்றே சில முறைகளையும் அதற்கான இடங்களையும் தெளிவாக பார்க்கலாம்.

விளக்கை முதன்முதலில் வீட்டின் பூஜை அறையில்தான் ஏற்ற வேண்டும். அடுத்து துளசி மாடத்தில் விளக்கேற்ற வேண்டும் துளசிமாடம் இல்லாத வீடுகளில் சமையல் அறையில் விளக்கேற்றலாம். செல்வம் பெருக வடகிழக்கு பார்த்தபடியும், குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க கிழக்கு பக்கம் பார்த்தபடியும் விளக்கேற்றலாம். பூஜை அறையில் ஏற்றி வைக்கும் விளக்கு குறைந்தது அன்று இரவு முழுவதும் எரியும் வகையில் வைக்க வேண்டும்.

பித்தளை விளக்குகளை வைப்பதன் மூலம் நேர்மறை ஆற்றலை வீட்டுக்குள் ஈர்க்கும் என்றும் மண் விளக்குகளை வைப்பதன் மூலம் தெய்வீகத் தன்மையை ஈர்க்கும் எனவும் நம்பப்படுகிறது. பசு நெய் ஊற்றி ஏற்றப்படும் விளக்குகள் வீட்டுக்குள் மகிழ்ச்சியை கொண்டு வரும். நெய் விளக்கு ஏற்ற முடியாவிட்டால் நல்லெண்ணெய், கடுகு எண்ணெய்யில் விளக்கு ஏற்றலாம் என்றும் நம்பப்படுகிறது.


RECENT POST

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here