ஒரு நாளைக்கு மட்டும் இத்தனை கோடியா?

0
So many crores just for one day-In Tirupati Temple To Increase The People

ஆந்திர மாநிலத்தில் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவில் உலகத்தின் பணக்கார கோவில்களில் ஒன்றாக கூறப்படுகிறது. வாரத்தின் இறுதி நாள் மற்றும் விடுமுறை நாட்களில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் காணப்படுவர்.

இந்நிலையில், கடந்த 3 நாட்களாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வைகுந்தம் காம்ப்ளக்ஸ் முழுவதும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் 40 மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டு செல்கின்றனர். இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரமாகிறது. ‌இன்று காலை தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் அலிப்பிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீநிவாசம் கெஸ்ட் ஹவுஸ் மற்றும் ரெயில் நிலையம் அருகில் உள்ள கோவிந்தராஜ சாமி சத்திரம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள டைம் ஸ்லாட் கவுண்டர்களில் டோக்கன் பெற்று சென்றனர்.

டோக்கன் எடுத்து செல்லும் நபர் 10 மணி நேரத்தில் தரிசன நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது குளிர் காலம் நிலவி வருவதால் இந்த குளிர் காலத்தைக்கூட பொருட்படுத்தாமல் அதிக அளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர். நேற்று ஒருநாள் மட்டும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 73,323 பேர் தரிசனம் செய்துள்ளனர். ரூ.4.85 கோடி உண்டியலில் காணிக்கை செலுத்தியுள்ளனர்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here