மீண்டும் ஒரு புதிய ரயில்வே வேலை அறிவிப்பு! தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் வேலை! விண்ணப்ப கட்டணம் இல்லை!

தெற்கு ரயில்வேயில் சூப்பரான வேலை அறிவிப்பு வந்துள்ளது. நம்ம தமிழகத்தில் உள்ள திருச்சிராப்பள்ளியில் வேலை செய்ய விண்ணப்பங்களை வரவேற்கிறது. பொது பணி மருத்துவ அதிகாரி (ஜிடிஎம்ஓ) பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை sr.indianrailways.gov.in-இல் வெளியிட்டுள்ளது. ஆர்வமும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 06-Dec-2023 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு விவரங்கள்

Southern Railway Job Openings in Tiruchirappalli District 75 Thousand Payscale

Educational Qualification:

தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ் (MBBS)முடித்திருக்க வேண்டும்

Salary:

மாதம் 75 ஆயிரம் ரூபாய் அரசு சம்பளமாக நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

Age Limit:

தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 01-07-2023 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 53 ஆக இருக்க வேண்டும்.

Age Relaxation:

OBC விண்ணப்பதாரர்கள்: 3 ஆண்டுகள்

SC, ST விண்ணப்பதாரர்கள்: 5 ஆண்டுகள்

Application Fee:

விண்ணப்ப கட்டணம் கொடுக்க வேண்டாம்.

Selection Process:

வாக்-இன் இன்டர்வியூ மூலம் பணியாளர்களை தேர்வு செய்கிறது தெற்கு ரயில்வே.

Important Dates:

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 22-11-2023

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06-12-2023

வாக்-இன் நேர்காணலின் தேதி: 12 டிசம்பர் 2023

மேலும் விரிவான விவரங்களை அறிந்துகொள்ள தெற்கு ரயில்வேயின் Official Notification & Application Form pdfஐ கிளிக் செய்து பாருங்கள். பின்னர் Southern Railway Apply Online லிங்கில் விண்ணப்பித்திடுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top