Home Festivals ஸ்பெஷல் பனை ஓலைக் கொழுக்கட்டை

ஸ்பெஷல் பனை ஓலைக் கொழுக்கட்டை

0

Panai Olai Kozhukattai Recipe: விநாயகர் சதுர்த்தி என்றாலே உடனே நம் நினைவுக்கு வருவது கொழுக்கட்டை தான். இதில் பால் கொழுக்கட்டை, பிடி கொழுக்கட்டை, கார கொழுக்கட்டை, பூரணம் வைத்த கொழுக்கட்டை என விதவிதமாக தயார் செய்யலாம். அந்தவகையில் சுவையான பனை ஓலைக் கொழுக்கட்டை எப்படி செய்வது என்பது குறித்து இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

Special Panai Olai Kozhukattai Recipe in Vinayagar Chathurthi

Panai Olai Kozhukattai Recipe
Panai Olai Kozhukattai Recipe

பனையோலைக் கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள்

சுமார் 05 பேருக்கு
சிவப்புப் பச்சரிசி – 1/2 கிலோ
வெள்ளை சர்க்கரை/கருப்பட்டி – 1/2 கிலோ
தேங்காய் – 1 மூடி
ஏலக்காய் – 05 கிராம்
சுக்கு – 05 கிராம்
தேவையான பனை ஓலைகள்

பனை ஓலைக் கொழுக்கட்டை செய்முறை:

சிவப்புப் பச்சரிசியைக் தண்ணிரில் கழுவி 2 மணி நேரம் ஊற வைத்து, துணியில் பரப்பி உலர வைத்து, மிக்சியில் அரிசியை நன்கு அரைத்து பின்பு சல்லடையில் சலித்துக் மாவை எடுத்துக் கொள்ளவும்.

இதற்கிடையே, பனை ஓலையின் மடிப்பான பகுதிகளை ஒரு அடி நீளத்தில் துண்டு துண்டாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு இரண்டு பக்கமும் முனைகளை வெட்டவும்.

பின்பு மாவை நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். இதில் துருவிய தேங்காய், பொடித்த ஏலம், சுக்குப் பொடி, சர்க்கரை அல்லது கருப்பட்டி இவற்றுடன் தண்ணீர் தெளித்து கட்டியில்லாமல் பக்குவமாக பிசைய வேண்டும்.

துண்டு துண்டாக வெட்டப்பட்ட பனை ஓலையில் மடிப்பான பகுதியில் நடுவில் மாவை வைத்து ஓலையை சேர்த்து மூடவும்.

அதன் மேல் இன்னொரு பனை ஓலையை வைத்து இரண்டையும் சேர்த்து மாவு வெளியே தெரியாதவாறு ஓலை நாரில் கட்டி விட வேண்டும்.

குக்கரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, தேவையில்லாத ஓலைகளை தண்ணீரில் போட்டு (வாசனைக்காக), கட்டப்பட்ட ஓலைகளை உள்ளே நிறுத்தி வைக்கவும். இந்த கொழுகட்டைகளை நன்கு வேக வைக்க வேண்டும்.

இந்த பனை ஓலைக்கொழுக்கட்டை 3 நாள் வரை கெடாமல் சுவையாகவும், பனை ஓலையின் வாசத்துடன், சத்துமிக்கதாகவும் இருக்கும்.

பரிசுப் பொருளைப் போல் பிரித்து திறந்து உண்ண வேண்டிய பலகாரம் என்பதால் பார்க்கும்போதே உற்சாகமூட்டும், குறிப்பாக குழந்தைகளுக்கு.

jobstamil facebook
telegram jobstamil
jobstamil twitter
jobstamil whatsapp

RECENT POSTS:

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here