சென்னையில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு! கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்!

சென்னையில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு! கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்!
சென்னையில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு! கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்!

‘கண்ணா’, ‘முகுந்தா’ என்று பல பெயர்களால் போற்றப்படும் கிருஷ்ணரை வழிபடும் நோக்கில் ‘கிருஷ்ண ஜெயந்தி’ விழா கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் தேய்பிறை எட்டாம் நாளில் கொண்டாடப்படுகின்ற இத்திருவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து மக்களும் அவரவர் இல்லங்களில் குழந்தை நடந்து வருவதை போன்று, வீட்டின் நுழைவு வாயிலில் இருந்து பூஜை அறை வரை பாதச்சுவட்டினை மாவால் பதியமிடுவர். இதனை தொடர்ந்து கிருஷ்ணர் சிலையை பூக்களால் அலங்கரித்தும் தங்களால் இயன்ற பிரசாதங்களை இறைவனுக்கு படைத்தும் வழிபடுவர்.

அதுமட்டுமின்றி, அனைத்து கிருஷ்ணர் ஆலயங்களிலும் இன்று சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றன.கிருஷ்ணரை போற்றும் வகையில் சென்னை MGR நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கோகுல கிருஷ்ணன் கோயிலில் நடைபெற்ற யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கடவுளை வழிபட்டனர்.

உத்திரபிரதேசம், ஹைதராபாத் போன்ற மாநிலங்களில் இருந்து முத்து, பவளம் மற்றும் விலையுயர்ந்த கற்கள் பதித்த ஆடை போன்றவைகள் கொண்டுவரப்பட்டது. இவைகள் அனைத்தும் சென்னை கிழக்கு கடற்கரை சாலை, அக்கரையில் உள்ள அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தில் ‘இஸ்கான்’ கிருஷ்ணர் கோவிலில் இருந்த கிருஷ்ணர் சிலைக்கு அணிவிக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணர் சிலைக்கு மங்கள, தூப், ராஜ் பக், துளசி, சந்திய போன்ற பலவகையான ஆரத்திகள் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. சென்னை மட்டுமின்றி அனைத்து புகழ்பெற்ற கிருஷ்ணர் கோயில்களிலும் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.