ssc-பணியாளர் தேர்வாணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்! உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

பணியாளர் தேர்வாணையம்(SSC)GD கான்ஸ்டபிள் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த பணியில் மொத்தம் 75768 காலியிடங்கள் இருப்பதால் உடனே ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 10th தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும் இப்பணிக்கு தகுதியானவர்கள் மாதம் ரூ. 18,000 முதல் ரூ. 69,100 வரை சம்பளம் வாங்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமாலும் வேலை செய்ய பணியமர்த்தப்படலாம்.

SSC RECRUITMENT 2024

ALSO READ : எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் (ONGC) புதிய வேலை அறிவிப்பு 2023! உடனே விண்ணப்பியுங்கள்!

GD கான்ஸ்டபிள் பணிக்கு வயது வரம்பானது 18 முதல் 23 வரை இருக்க வேண்டும். தகுதியான நபர்கள் Computer Based Exam, Physical, Medical அடிப்படையாக கொண்டு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆன்லைனில் விண்ணப்பிக்க கட்டணம் 100 செலுத்த வேண்டும். கால அவகாசம் நவம்பர் 24, 2023 முதல் டிசம்பர் 28,2023 முடிவதற்குள் விண்ணப்பித்து விடுங்கள்.இப்பதிவின் மேலும் சில தகவல்களை Official Website-ல் தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் ssc-ன் Official Notification உள்ள apply online கிளிக் செய்து விவரங்களை பூர்த்தி செய்து கடைசி தேதி முடிவதற்குள் ஆன்லைனில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top