ஊழியர்களே… உங்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்..! இனி நீங்கள் இதை செய்தால் ஓய்வூதியம் கிடையாது! மத்திய அரசின் புதிய அறிவிப்பு!!

Staff a shock news for you No more pensions if you do this Governments new announcement released just now read it immediately

கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வானது 4% வரை உயர்த்தி வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து வருகின்ற ஜுலைக்கான அகவிலைப்படி உயர்வானது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை உயர்த்தப்படுவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து மத்திய அரசு ஊழியர்களுடைய அடிப்படை ஆரம்ப நிலை ஊதியமானது மேலும் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.

இதற்கு மத்தியில் ஒரு சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசானது ஊழியர்களுக்கு ஒரு முன்னெச்சரிக்கையையும் அறிவித்திருக்கிறது. அதாவது அரசு ஊழியர்கள் பணிகாலத்தின்போது அலட்சியமாகவோ அல்லது ஏதாவது கடுமையான தவறு(அ)குற்றம் செய்யப்பட்டிருந்தாலோ அவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த கிராஜுவிட்டி எனப்படும் பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் போன்றவைகள் நிறுத்தி வைக்கப்படும். இவ்வாறு காணப்படுகின்ற அரசு ஊழியர்களுக்கு அவைகள் வழங்கப்பட மாட்டாது என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

மேலும் மத்திய அரசானது இந்த அறிவிப்பை CCS எனப்படும் மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதியம்) விதிகள் 2021ன் கீழ் அறிவித்தது. தற்போது அதில் இருக்கும் 8வது விதியை மாற்றி ஒரு புதிய விதியை சேர்த்திருக்கிறது. அதுவே மத்திய அரசு தெரிவித்திருக்கின்ற மேற்கூறிய எச்சரிப்பான அறிவிப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN