தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு 9 நாள் பயணம் மேற்கொண்டார். அடுத்த ஜனவரி மாதத்தில் நடைபெற உள்ள உலகத் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலீட்டாளர்களை பங்கேற்க அழைப்பு விடுக்கவும், தொழில் முதலீடுகளை ஈர்க்கவும் தமிழக முதல்வர் வெளிநாடு பயணத்தை மேற்கொண்டார். இந்த பயணம் நிறைவடைந்த நிலையில், இன்று சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
9 நாள் வெளிநாட்டு பயணமாக முதலில் சிங்கப்பூர் சென்றடைந்த அவர், அங்கு 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார். தொடர்ந்து அங்கு இருந்து ஜப்பான் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், 818 கோடியில் டோக்கியோவில் உள்ள 6 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதேபோல் ஓம்ரான் நிறுவனத்துடன் 128 கோடியில் மருத்துவ உபகரண உற்பத்தி தொழிற்சாலைத் தொடங்கவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் என மொத்தம் 13 முக்கியமான ஒப்பந்தங்களை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டார்.
இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 10 மணிக்கு சென்னை திரும்புகிறார். அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- உங்களுக்கு வேலை செஞ்ச அனுபவமே இல்லையா? கவலைய விடுங்க! சூப்பரான சம்பளத்துல 30 காலியிடங்கள் இருக்கு! Apply Now!
- மொத்தம் 50 காலியிடங்களுக்கு உடனே விண்ணப்பியுங்க! முன் அனுபவம் இல்லாத ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்க முடியும்!
- நம்ம சேலத்துல புதிய வேலை அறிவிப்பு! 10 காலியிடங்களை அறிவிச்சிருக்காங்க! உடனே விண்ணப்பியுங்க!
- பிரஷர்ஸ்க்கு 50 காலியிடங்கள் இருக்கு! சூப்பரான சம்பளம்! சூப்பரான வேலை! தமிழ்நாட்டிலேயே வேலை செய்யலாம்!
- தனியார் வேலை செய்ய உங்களுக்கு ஓகே வா? அப்ப இந்த புதிய வேலை அறிவிப்புக்கு விண்ணப்பிக்க விரையுங்கள்!