தமிழக அரசு பேருந்துகளில் அதி நவீன டிக்கெட் கருவிகள்..! 38 ஆயிரம் கருவிகளை இலவமாக வழங்கும் SBI…

State-of-the-art ticketing machines in Tamil Nadu government buses SBI to provide 38000 devices for free

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களிலும் சேர்த்து சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயங்கி வருகின்றனர். இதில், தினந்தோறும் 1.55 கோடிக்கும் அதிகமானோர் பயணம் செய்து வருகின்றனர். இதில் பயணம் செய்பவர்களுக்கான பயணசீட்டு வழக்கும் முறை மின்னணுவாக மாற்றப்பட்டு கடந்த 16 வருடமாக கடைபிடிக்கப்ட்டு வந்தது. அதன்பின், கடந்த 2011 ஆம் ஆண்டு அதி நவீன பயணசீட்டு வழங்கும் முறையை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு திட்டமிட்டது.

இந்த புதிய நடைமுறையை அமல்படுத்த மத்திய அரசின் நிதியுதவியுடன் சுமார் ரூ.20 கோடி மதிப்பீட்டில் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வந்தது. இதில், முதற்கட்டமாக சுமார் 30 ஆயிரம் கருவிகள் ஒப்பந்த அடிப்படையில் வாங்கப்பட்டது. இந்த கருவி மூலம் பேருந்துகளில் பயணம் செய்யபவர்களுக்கு மிக எளிமையான முறையில் டிக்கெட்டை விநியோகிக்க முடியும். மேலும், இந்த கருவி மூலம் எத்தனை டிக்கெட்டுகள் வாங்கப்பட்டுள்ளது உள்ளிட்ட விவரங்களையும் எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.

ALSO READ : மிக்ஜம் புயல் பாதிப்பு : ரேஷன் கடைகளில் இன்று முதல் ரூ. 6,000 நிவாரணத்தொகை… இவர்களுக்கெல்லாம் நிச்சயம் முன்னுரிமை!

இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கியானது 38 ஆயிரம் பயணச்சீட்டு கருவிகளை இலவசமாக வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஒரே அட்டையை பயன்படுத்தி பொதுப்போக்குவரத்து வாகனங்கள் அனைத்திலும் பயணச்சீட்டு பெறும் வகையில் என்சிஎம்சி என்ற அட்டையை கடந்த வருடம் மத்திய அரசு அறிமுகம் செய்திருந்தது. இந்த அட்டையை தற்போது, பயன்படுத்த வேண்டுமானால் பொது போக்குவரத்தில் பயணச்சீட்டு கருவியின் பயன்பாடு அவசியம் என்பதால் பாரத ஸ்டேட் வங்கி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top