எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? அதற்கு நீங்கள் பின்பற்ற வேண்டிய சில பழக்கங்கள்!

Steps To Follow To Be Happy In Tamil

உலகில் உள்ள அனைவரும் தங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என விரும்புவார்கள். மார்ச் 20-ஆம் தேதி சர்வேத மகிழ்ச்சி நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் நாம் அனைவரும் நம் வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ்கிறோமா என்று கேட்டால் அது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

நம் நடைமுறை வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ்வது என்பது சாத்தியமான ஒன்று இல்லை தினந்தோறும் ஏதேனும் ஒரு பிரச்சனையில் மாட்டி கொண்டு மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம். ஒரு பிரச்சனை போனால் மற்றொரு பிரச்சனை என அடுத்து அடுத்து பிரச்சனைகள் வந்த வண்ணம் உள்ளது. மன அழுத்தத்தின் போது தேவையான அளவு உறக்கம் கொண்டால் அவற்றில் இருந்து விடுப்பட முடியும். இரவு நேரங்களில் அதிக அளவு தூங்கும் போது அடுத்த நாள் தெளிவான மன நிலை கிடைக்கும். மகிழ்ச்சி என்பது எளிதில் கிடைப்பதில்லை அதற்காக சில பயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? அதற்கு நீங்கள் பின்பற்ற வேண்டிய சில பழக்கங்கள்!

செல்ல பிராணிகள் மற்றும் இயற்கை செடிகள் வளர்த்தல்:

Pets And Natural Plants

நமக்கு மன அழுத்தம் என்பது எங்கிருந்து வேண்டுமாலும் வரும். சிலருக்கு இயற்கையை ரசிக்கும் போது மனது லேசாக மாறும். அவ்வாறு இருக்கும் போது நமது வீடுகளில் செடிகளை வளர்க்கும் போது அல்லது அவற்றை ரசிக்கும் போது மன கவலை அனைத்தும் பறந்து விடும். சிலருக்கு செல்ல பிராணிகள் என்றால் மிகவும் பிடிக்கும். நமக்கு சோகம், கவலை ஏற்படும் போது நாம் வளர்க்கும் செல்ல பிராணிகளிடம் விளையாட்டு பேன்றவற்றில் நேரத்தை செலவிடும் போது மனது ஆறுதல் அடையும். எப்பொழுது எல்லாம் மனது கவலையாக உணர்கின்றிகளோ அப்போது எல்லாம் இந்த மாறி ஏதேனும் ஒரு செயலில் ஈடுபடுங்கள்.

மன கஷ்டங்களை வெளிப்படுத்தல்:

Disclosure of Mental Distress

உங்கள் மனதில் நிறைய கவலைகள் இருக்கும். அதை உங்களுக்கு நம்பிக்கையான நபரிடம் தெரியப்படுத்துங்கள். அப்படி இல்லையேல் உங்கள் மனதில் பல நாட்களாக தீராத சோகம் இருந்தால் அதை ஒரு நோட் போட்டு எழுதி கொள்ளுங்கள் இப்படி செய்யும் போது மனதில் உள்ள கவலைகளை யாரோ ஒருவரிடம் சொல்லி தீர்த்தது போன்ற உணர்வு ஏற்படும். ஏதேனும் ஒரு வகையில் உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தி விடுங்கள் அது மிகவும் நல்லது.

ALSO READ >குளு குளுன்னு இருக்கும் குளிர்கால பிரச்சனைகளும் அதற்கு சூடான தீர்வுகளும்..

பிடித்தவற்றை செய்தல்:

Making Favorites

என்னதான் மனது கவலை அல்லது அழுத்தத்தில் இருந்தாலும் நமக்கு பிடித்தவற்றை செய்யும் போது அவை மறந்து விடும். ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்றின் மீது ஈர்ப்பு இருக்கும். நடனம், ஓவியம் வரைதல், சமையல் செய்தல், கைவினை பொருட்களை செய்தல் என பல்வேறு திறமைகள் இருக்கும். இவற்றில் எதை செய்தால் நாம் மகிழ்ச்சியாக இருப்போம் என அறிந்து செயல்படுங்கள்.

தேவையான அளவு தூங்குதல்:

Adequate Sleep

எவ்வளவு பெரிய மன அழுத்தம் இருந்தாலும் சிறிது நேரம் உறங்கி பாருங்கள் அந்த கவலை எல்லாம் மறந்து போய்விடும். ஒருவர் தினமும் தேவையான அளவு தூங்கினாலே பாதி மன அழுத்தம் நீங்கி விடும். ஒருவர் ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் தூங்க வேண்டும். இது கேட்பதற்கு எளிதாக தோன்றாலம். ஆனால் அதிகமாக தூங்குவதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுப்பட்டு துன்பங்கள் அனைத்தும் குறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுவதுடன் புத்துணர்ச்சியுடன் செயல் பட முடியும்.

கட்டாயத்துடன் எதையும் செய்யாதீர்கள்:

Dont Do Anything Under Complusion

ஏதேனும் ஒரு கட்டத்தில் உங்களுக்கு பிடித்த ஒருவர் அல்லது உங்களுக்கு கட்டளை இடும் நபராக இருப்பவர்கள் உங்களுக்கு பிடிக்காத ஒரு செயலை செய்ய தூண்டுவார்கள்.அப்போது அது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை கட்டாயத்துடன் செய்யாதீர்கள். பிடிக்கவில்லை என்றால் அதை செய்ய முடியாது என்று சொல்லி விடுங்கள். ஏனெனில் பிடிக்காத ஒன்றை செய்யும் போது அது மேலும் மன அழுத்தத்திற்கு தள்ளிவிடும்.

ALSO READ >குளிர்காலத்தை சமாளிக்க சூப்பரான டிப்ஸ்..!

மனதை மயக்கும் மெல்லிசை பாடல் கேட்டல்:

Song

மன கவலை அதிகம் இருக்கும் போது உங்கள் மனதில் ஏதோ ஒரு பெரிய கல்லை தூக்கி வைத்தது போன்ற உணர்வு ஏற்படும். அந்த ஒரு சூழலில் மனதிற்கு இதமான பாடல்களை கேளுங்கள். உங்களுக்கு பிடித்த பாடல்களை உங்களின் பிளே லிஸ்ட்-யில் சேர்த்து கொண்டு தினமும் கேளுங்கள். சோர்வாக உணர்ந்தால் மனதை தூண்ட கூடிய பாடல் கூட உள்ளது அவற்றை கேளுங்கள். பிடித்த பாடல்கள் கேட்பதன் மூலம் மகிழ்ச்சியாக உணர முடியும்.

அனைத்து வேலைகளையும் சுமக்காதீர்கள்:

Dont take on all the work

தன் பணியில் நல்ல பெயர் பெற வேண்டும் என்று உங்கள் சக்திக்கு மிறி வேலைகளை சுமக்காதீர்கள். நீங்கள் ஒருவர் மட்டும் அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு கொண்டு செய்யும் போது அது தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தும். நீங்கள் எளிதில் முடிக்க கூடிய வேலைகளை சீக்கிரம் முடித்து கொடுத்து விடுங்கள். அப்போது வேலை நிறைய இருப்பது போன்ற எண்ணம் தோன்றாது. குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும் என்றால் உங்கள் பொறுப்புகளை அதற்கு தகுதியான நபர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். இவ்வாறு செய்யும் போது சுமை குறைந்து மகிழ்ச்சியுடன் இருக்க வாய்ப்பு கிடைக்கும்.

ALSO READ >குளிர்கால நோயிகளிலிருந்து நம்மை தற்காத்து கொள்ள உதவும் ஓர் அற்புத மருந்து இதோ..

தியானம் மற்றும் உடற்பயிற்சி செய்தல்:

Meditation and Exercise

மனதை ஒரு நிலையில் வைத்து கொள்ள தியானம் செய்தல் வேண்டும். மனது எந்த ஒரு குழப்பம் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் யோகா சிறந்த வழி. முதலில் நாம் நடுநிலையுடன் இருந்தால் தான் மகிழ்ச்சியுடன் வாழ முடியும். மேலும் உடற்பயற்சி செய்வதன் மூலம் மனதின் திசையை மாற்ற முடியும். யோகாசனம், உடற்பயற்சி, நடைபயிற்சி, ஜும்பா நடனம் போன்றவற்றில் ஈடுபடுத்தி கொள்வதாம் மூலம் மனது மற்றும் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

தவறுகளை மன்னிக்க கற்றுகொள்ளுங்கள்:

Learn to Forgive Mistakes

ஒருவர் செய்த தவறுகளை மன்னிப்பது என்பது சிறந்த ஒரு செயலாகும். இந்த குணம் அனைவரிடமும் இருக்க வேண்டும். உங்களுக்கு பிடித்த ஒரு நபர் உங்களுக்கு பிடிக்காத ஒரு செயலை செய்யும் பொது கோவம் சண்டை வரும். அப்போது பல நாட்களுக்கு பேசாமல் இருந்து விடுவோம். நீண்ட நாட்களுக்கு தொடர்ச்சியாக இருந்து கொண்டே இருக்கும். பிடித்தவரிடம் பேசாமல் இருக்கும் மனது மிகவும் கஷ்ட படும். தவறு அறியாமல் நடந்துவிட்டால் அதை மன்னித்து விடுங்கள். அப்போது தான் உறவு நீண்ட நாள்களுக்கு பலமாக இருக்கும். எதையும் மன்னிக்க கற்று கொள்ளுங்கள் அது உறவை திடம் படுத்தும் மன கஷ்டத்தை குறைக்கும், மகிழ்ச்சியுடன் வாழ முடியும்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here