இன்னும் உங்களுக்கு TNPSC ரிசல்ட் வரலையா? இந்த செய்தி உங்களுக்குத்தான்..! உடனே படிங்க…

Still haven't received your TNPSC Result This news is for you..! Read now dont miss it

குரூப்-2, 2ஏ தேர்வு முடிவு எப்போது?

டி.என்.பி.எஸ்.சி. தகவல்

சென்னை, ஏப்.19-

குரூப்-2, 2ஏ பதவிகளில் காலியாக உள்ள 5 ஆயிரத்து 446 பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு (2022) பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான முதல்நிலை தேர்வு கடந்த ஆண்டு மே மாதம் நடந்தது. அதனைத் தொடர்ந்து இந்த பதவிகளுக்கான முதன்மை தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 25-ந் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவு வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிடப்பட்டுள்ள புதிய அட்டவணையில் வருகிற டிசம்பர் மாதம் முதன்மை தேர்வு முடிவு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 5ஏ, 3ஏ, உளவியல் உதவி பேராசிரியர், கால்நடை உதவி சிகிச்சை நிபுணர் உள்பட சில பதவிகளுக்கு நடத்தப்பட்ட எழுத்து தேர்வுக்கான முடிவு மே மாதத்தில் வெளியிடப்படும்.

மேலும் குரூப்-7பி, குரூப்-8, வன உதவியாளர், நிருபர், ஜெயிலர் பணியிடங்கள், ஒருங்கிணைந்த புள்ளியியல் சேவைகள் துறை பணியிடங்கள், மீன்வளத்துறையில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள், சுகாதார அலுவலர் பணியிடங்கள் போன்றவற்றிற்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவு இந்த மாதத்துக்குள் வெளியாக இருக்கிறது.

இதேபோல், 95 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவும் இம்மாதத்துக்குள் வெளியிடப்பட உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

TNPSC

RECENT POSTS IN JOBSTAMIL.IN