தமிழகத்தில் புயல் எச்சரிக்கை..! விரைகிறது தேசிய பேரிடர் மீட்பு படை

Storm warning in Tamil Nadu National Disaster Response Force rushes in-Storm Alert For Tamil Nadu

வங்கக் கடலில் நாளை புயல் உருக்காக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை உள்பட 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை மக்களின் பாதுகாப்புக்காகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகவும் விரைந்துள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி நிலையில் கனமழை பெய்தது. கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் பெரிய அளவில் மழை ஏதும் பெய்யவில்லை. இதையடுத்து தற்பொழுது மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக மாறியுள்ளதாகவும் இன்று மாலைக்குள் தாழ்வு மண்டலமாக மாறி நாளைக்குள் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த தாழ்வு மண்டலமானது வலுபெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here