வேலையில் மன அழுத்தம் ஏற்படுகிறதா? இதோ அதற்கான சிறந்த தீர்வுகள்..

Stressed Out At Work And Their Best Solutions In Tamil

அனைவரும் தங்களுடைய வாழ்க்கையில் அமைதியான நிலையில் வாழ வேண்டும் என முயற்சி செய்கின்றனர். ஆனால் இந்த கால கட்டத்தில் மன அழுத்தம் நம் வாழ்வில் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது. ஏதேனும் ஒரு சூழ்நிலையில் அனைவரும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம். குறிப்பாக வேலை தொடர்பான மன அழுத்தம் என்பது ஒரு செயலை நமக்கு எதிராக செயல்படுவதாக உணர்கிறோம்.

மன அழுத்தத்துடன் ஒரு வேலையில் நாம் தொடர்ந்து பணியாற்றும் போது அது உடலுக்கு தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும். அதாவது கோபம், மனச்சோர்வு, செரிமான பிரச்சனைகள், இதய கோளாறு, தூங்குவதில் பிரச்சனை, தலைவலி, உடல் எடை குறைதல் போன்ற விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.

நாம் வேளையில் ஈடுப்படும்போதோ அல்லது அங்கு உள்ள சூழ்நிலையின் காரணமாகவோ ஏற்படும் மன அழுத்தம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் பல வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். ஒருவர் இந்த மாதிரியான மன அழுத்த சுழலில் தனது வேலையில் ஈடுபடும் போது கார்டிசால் என்னும் ஸ்ட்ரெஸ் ஹார்மோன் உடலில் சுரக்கிறது. இந்த ஹார்மோன் தான் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. அதுவே இந்த ஹார்மோன் அதிக அளவில் சுரக்கும்போது சில விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இது ஒரு ஆபத்தான நிலை என்பதால் இதனை கட்டுபடுத்துவதற்கான வழிமுறைகளை காண்போம்.

காரணங்களை கண்டறிதல்:

Stress at work

எந்த ஒரு விசயமாக இருந்தாலும் அதற்கு காரணத்தை கண்டறியும்போதுதான் அதற்கான தீர்வுகள் கிடைக்கும். அது போல மன அழுத்தம் ஏற்பட்டால் அதற்கான காரணத்தை கண்டறிந்து அதனை சரிசெய்வதே சிறந்த வழியாகும். காரணத்தை ஆராயும் போது மன அழுத்தத்தை குறைக்க முடியும். உங்களுக்கு ஒரு சூழ்நிலையில் மன அழுத்தம் வரும் போது அது எதனால் வருகிறது என கண்டறியும் போது அவற்றை சரி செய்ய முடியும். இதன் காரணத்தை கண்டறிவதன் மூலம் எதிர் காலத்தில் மன அழுத்தம் ஏற்படாமல் தடுக்க முடியும்.

டீ மற்றும் காபி குடித்தல்:

Drinking tea and coffee

வேலை நேரங்களில் கிடைக்கும் இடைவேளை நேரங்களில் டீ மற்றும் காபி போன்ற உணவு பானங்களை குடிப்பதன் மூலம் மன அழுத்தம் குறைவதாக பலர் கூறுகின்றனர். டீ , காபி குடிப்பதன் மூலம் ஒரு வகையான பிரெஷ்நெஸ் கிடைப்பதாக உணர்கின்றனர். மேலும் வேலையின் போது வரும் அடுத்த அடுத்த அழைப்புகள் மற்றும் வேலையின் போது அவ்வப்போது வைக்கப்படும் தொடர் மீட்டிங் போன்றவற்றால் மன அழுத்தம் மற்றும் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவற்றை நீக்குவதற்காக டீ , காபி போன்றவற்றை குடிப்பதன் மூலம் மன அழுத்தத்திலிருந்து வெளிவர முடிகிறது என்று கூறுகின்றனர்.

ALSO READ >எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? அதற்கு நீங்கள் பின்பற்ற வேண்டிய சில பழக்கங்கள்!

வாசனை பொருட்களை பயன்படுத்தல்:

Use of Fragrances

பொதுவாகவே ஒரு பொருளின் வாசனையை நுகர்வதன் மூலம் நல்ல ஒரு அமைதியான நிலை கிடைக்கும். அது போன்று சிலர் தங்களுக்கு மன அழுத்ததின் போது நறுமண பொருட்களை நுகர்வதன் மூலம் ஒரு வகையான FREE MIND கிடைப்பதாக கூறுகின்றனர். ஆயர்வேத முறையில் கூட வாசனை பொருட்கள் மற்றும் எண்ணெய்களையும் பயன்படுத்தி நுகர்வதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்கும் அரோமா தெரபி உள்ளது. பிரபலமான நறுமண பொருட்களாகிய லாவண்டர், ரோஸ், சாண்டல் போன்ற வாசனை பொருட்கள் நோயாளிகளுக்கு கொடுக்கபடுகின்றன. இவற்றை பயன்படுத்துவதன் மூலம் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மேலும் உங்களுக்கு வேலையின் போது ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க இது போன்ற வாசனை பொருட்கள் அல்லது வாசனை திரவியங்களை பயன்படுத்தலாம்.

சிறிது நேரம் BREAK எடுத்து கொள்ளலாம்:

You Can Take a BREAK For a While

ஒரு இயந்திரம் தொடர்ந்து வேலை செய்யும் போது அது பழுது ஆகிவிடும். அது போலத்தான் மனிதர்களுக்கும் எந்த வேலையும் தொடர்ந்து செய்யும் போது சோர்வு ஏற்பட்டு அந்த வேலையை முடிக்க முடியாமல் போய்விடுகிறது. எனவே வேலை செய்யும் போது ஏதேனும் சோர்வு அல்லது மந்த நிலையாக உணர்ந்தால் அப்போது சிறிது ஓய்வு எடுத்து கொல்வது தவறு இல்லை. இப்படி ஒரு இடைவேளை எடுப்பதன் மூலம் ஒரு புத்துணர்வு ஏற்பட்டு வேலையை சீக்கிரம் முடிக்க உதவும். இந்த இடைவேளை நேரத்தில் உங்களுக்கு பிடித்த பாடல் கேட்பது அல்லது தியானம் செய்வது என பிடித்த செயல்களை செய்யலாம்.

நடைப்பயிற்சி செய்தல்:

Walking

மன அழுத்தம் அதிகரிக்கும் வேளைகளில் சிறிது தூரம் நடைப்பயிற்சி செய்யலாம். இயற்கை அழகை ரசிக்கும் போது மனம் அமைதியான நிலையை அடையும். நடைப்பயிற்சி செய்யும் போது நல்ல ஒரு இயற்கையான சுழலில் இருந்தால் அவற்றை பார்க்கும் போது மன அழுத்தம் குறைந்து புத்துணர்வு கிடைக்கும். மேலும், இப்படி செய்வதன் மூலம் வேலையிலும் முழு ஈடுபாட்டுடன் செய்ய மனது ஒத்துழைப்பு தரும்.

ALSO READ >வீட்டில் இருந்தே ஆன்லைன் வேலை பாக்குறீங்களா? பயனுள்ள சில குறிப்புகள் இதோ…

யோகாசனம் செய்தல்:

Practicing Yoga

கணினி வேலை என்றால் ஒரு இடத்தில் அமர்ந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். அப்படி இருக்கும் போது மன அழுத்தத்தை தாண்டி உடல் வலியும் சோர்வும் ஏற்படும். ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதன் மூலம் ஏற்படும் உடல் வலியை போக்க சில ச்ட்ரேச்சிங் பயிற்சி செய்யலாம். மேலும் வேலை நேரங்களில் கிடைக்கும் இடைவேளை நேரங்களில் யோகாசனம் செய்வதன் மூலம் நல்ல ஒரு பலன் நம் உடலுக்கும் மனதுக்கும் கிடைக்கும்.

4-7-8 என்ற மூச்சி பயிற்சி செய்தல்:

Breathing Exercise

உங்களுது நாக்கின் நுனியை வாயின் முன்பகுதில் உள்ள மேல் பக்க பல்லில் சற்று அழுத்திகொண்டு மூக்கின் வழியாக 4 நொடிகள் வரை மூச்சை உள்ளே இழுக்க வேண்டும். பின்னர் 7 நொடிகள் வரை மூச்சை அடக்கிய பின்னர் 8 நொடிகள் வரை வாயின் வழியாக மூச்சை வெளி விட வேண்டும். இந்த பயிற்சியை செய்வதன் மூலம் உடலுக்கு நல்ல ஆக்சிஜன் கிடைப்பதுடன் மனம் மற்றும் உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here