மாணவர்களே நீங்களும் மாசம் ரூ.1000 வாங்கணுமா…? இதோ முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பு!!

Students do you also want to buy Rs.1000 per month Here is the Chief Ministers action announcement

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முதல்வர் திறனறிவு தேர்வு திட்டத்தினை சென்னையில் உள்ள ஐஐடி வளாகத்தில் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், இதுகுறித்து முதலைமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறுகையில் அனைத்து குழந்தைகளும் படிப்பதற்கான சிறந்த இடமாக அரசுப் பள்ளிகள் மாறி வருகின்றன என்று தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கு மின்னணு சார்ந்த செயல்முறை பயிற்சிகள் அளிக்கும் வகையில், 250 அரசுப் பள்ளிகளுக்கு மின்னணு செயல்முறைப் பெட்டகங்களை முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

மேலும், முதல்வர் திறனறி தேர்வு திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் 1000 பேருக்கு, அவர்கள் 12ம் வகுப்பு நிறைவு செய்தவுடன் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்றார். இத்திட்டத்தில் தேர்வாகும் 1000 மாணவர்களுக்கு ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்தி வழிகாட்டுதல் நடத்தப்படும் என்றார். அதே மாணவர்கள் இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கு வரும்போது ஆண்டிற்கு ரூ. 12,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN