மாணவர்களே சீக்கிரம் தயாராகுங்கள்… அடுத்த மாதம் தென் இந்திய அளவிலான அறிவியல் கண்காட்சி..!

Students get ready soon South India level science fair next month

தென் இந்திய அறிவியல் கண்காட்சியானது ஆண்டுதோறும் அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பயிலும் 8 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. இந்த அறிவியல் கண்காட்சியானது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடக, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது.

அந்த வகையில், இந்த தென் இந்திய அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க ஒவ்வொரு மாநிலங்களிலும் மாநில அளவிலான கண்காட்சி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறுபவர்கள் தென் இந்திய அறிவியல் கண்காட்சியில் பங்கு பெற முடியும். அதன்படி, 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான அறிவியல் கண்காட்சியானது 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 வது வாரத்தில் ஆந்திர மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் நடத்தப்பட உள்ளது.

ALSO READ : நெருங்கி வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை : களைகட்டிய வீரகனூர் ஆட்டுச்சந்தை! ரூ.1.50 கோடிக்கு மேல் விற்பனை செய்யப்பட்ட ஆடுகள்…

இந்நிலையில், தென் இந்திய அறிவியல் கண்காட்சியில் தமிழக மாணவர்கள் கலந்து கொள்ள வருகிற 27 ஆம் தேதி மாநில அளவில் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இதில் வெற்றி பெறும் மாணவர்கள் அடுத்தக்கட்டமாக ஜனவரி மாதம் நடைபெற உள்ள மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு அனுப்பப்படுவார்கள் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top