தமிழகத்தில் தனியார் பள்ளிகளை போலவே அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்திறன் மற்றும் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் மற்றும் உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திறன் தேர்வு நடத்தப்பட உள்ளது.
அதன்படி, இந்த திறன் தேர்வானது வருகிற ஆகஸ்ட் 29 ஆம் தேதி முதல் செப்டம்பர் 1 ஆம் தேதி வரை நடத்த உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில், தற்பொழுது இந்த தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், திறன் வழி மதிப்பீட்டு தேர்வுகளுக்கான கேள்வித்தாள் exam.tnschools.gov.in என்ற இணையதளம் வாயிலாக முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்படும்.
Also Read : நிலவை தொடர்ந்து சூரியனுக்கு டார்கெட் வைத்த இஸ்ரோ..! விண்ணில் பாய காத்திருக்கும் அடுத்த ராக்கெட்!!
மேலும், இந்த தேர்வுகள் 40 நிமிடங்கள் நடத்தப்பட வேண்டும்.மொத்தம் 25 கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் என்ற வகையில் கொள்குறி வகை கேள்விகளாக இடம்பெற்றிருக்கும். விடைகளை கேள்வித்தாளிலேயே எழுத வேண்டும். இதற்காக ஒதுக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் ஆசிரியர்கள் தேர்வை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.