பிளஸ் 2 ரிசல்ட் வந்த மாணவர்களுக்கு அரசு தேர்வுகள்துறையின் முக்கிய அறிவிப்பு! ஸ்கிப் பண்ணாமா படிங்க..!

தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளானது நேற்று காலை வெளிவந்தன. இத்தேர்வு முடிவுகள் அனைத்தும் சென்னையில் உள்ள கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியால் வெளியிடப்பட்டது.

students read it now Important announcement of government examination department for students who got plus 2 result! Don't skip and read..!

இப்பொதுத் தேர்வில் மொத்தம் 7 லட்சத்து 55 ஆயிரத்து 451 பேர்கள் வரை தேர்ச்சியடைந்து இருக்கின்றனர். இது மொத்த சதவிகிதத்தில் 94.03 சதவீதம் ஆகும். மேலும் அதிக அளவு மாணவிகளே மாணவர்களை விட எப்பொழுதும் போல தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். அதாவது 96.38% என்ற விகிகதத்தின்படி 4 லட்சத்து 5 ஆயிரத்து 753 மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து 91.45% என்ற விகிதப்படி 3 லட்சத்து 49 ஆயிரத்து 697 மாணவர்கள் இதில் தேர்ச்சியடைந்துள்ளனர்.

அதுமட்டுமல்லாது மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் தேர்ச்சி பெற்றிருக்கிறார். மேலும் மாணவிகள் 4.93% வரை மாணவர்களை விட தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில் தேர்ச்சி விகிதம் 93.76 ஆக இருந்தது. இந்த வருடத்தில் அதைவிட அதிகரித்துள்ளது.

மேலும் பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள்களுடைய மறுகூட்டல் மற்றும் நகல்களை பெற இன்று (09.05.2023) முதல் விண்ணப்பிக்க அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. இதற்கான நேரம் செவ்வாய் காலை 11 மணியிலிருந்து 13-ம் தேதி மாலை 5 மணி வரையும் விண்ணப்பிக்குமாறு அரசு தேர்வுத் துறையானது தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் ரூ.275 விடைத்தாள் நகலுக்கும், ரூ.205 மறுகூட்டலுக்கும் கட்டணமாக செலுத்தப்பட வேண்டும். தொடர்ந்து ரூ.305 கட்டணமாக உயிரியல் பாடத்திற்கு மட்டுமே அளிக்க வேண்டும் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN