தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடந்த 10 ஆம் வகுப்புபொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது என்று தமிழக தேர்வு துறை இயக்குநர் சேதுராம வர்மா நேற்று வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் , 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்று காலை 10.00 மணி முதல் அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், தனித்தேர்வர்கள் அனைவரும் தங்களது சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கபட்டுள்ளது.
Also Read : நீங்களும் ஸ்மார்ட் போன் வச்சிருக்கீங்களா..? அப்போ உங்க மொபைலுக்கும் இந்த மெசேஜ் வந்துச்சான்னு செக் பண்ணுங்க…
இதையடுத்து, எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள் தங்கள் படித்த பள்ளிகள் மூலமாக அசல் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
மேலும், பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதியவர்களில் மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றமுள்ள மாணவர்களின் பதிவெண் பட்டியல் இன்று பிற்பகல் வெளியிடப்படுகிறது. இதன் விவரங்களை www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் மாணவர்கள் அனைவரும் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.