சென்னை சென்டிரல், பெரமலூர் மற்றும் காட்டான்கொளத்தூர் தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட சென்னை கோட்டத்தில் 4 ரெயில் நிலையங்களில் ரெயில் பெட்டி உணவகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனை சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈரயா நேற்று சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தின் முகப்பில் வாகன நிறுத்தும் இடத்தின் அருகே தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட ரெயில் பெட்டி உணவகத்தை தொடங்கி வைத்தார்.

இந்த உணவகத்தின் வெளியில் நின்றபடி 110 பேரும், ரெயில் பெட்டி உணவகத்தின் மேற்கூரையில் 26 பேரும், உள்ளே இருந்தபடி 40 பேரும், அமர்ந்து சாப்பிடலாம். அதன்பிறகு, இந்த ஒப்பந்தத்தை தனியாருக்கு 2 வருட காலத்துக்கு ரூ.2.2 கோடிக்கு ரெயில்வே வழங்கியுள்ளது. மேலும், விரைவில் பொத்தேரி, பெரம்பூர் மற்றும் காட்டாங்கொளத்தூர் ரெயில் நிலையங்களில் ரெயில் பெட்டி உணவகம் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Also Read : நண்பர்களே! நாளை இரவு வானில் நிகழப்போகும் அதிய நிகழ்வு..! மிஸ் பண்ணாம பாருங்க…