கடந்த 17 ஆம் தேதி சாமி தரிசனம் செய்வதற்காக உத்திரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தென்னிந்தியாவில் 60 க்கும் மேற்பட்டோர் ஒரு பெட்டியில் பயணித்துள்ளனர். இவர்கள், நேற்று நாகர்கோவிளிலில் உள்ள பத்மநாதர் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டு மதுரையை வந்தடைந்தனர்.

இந்நிலையில், இந்த ரயில் பொட்டியானது மீண்டும் சுற்றுலா செல்வதற்காக வேறொரு ரயிலில் இணைக்கப்படுவதற்காக மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ தூரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதன்பிறகு, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா விரைவு ரயிலில் தேநீர் தயார் செய்வதற்காக சிலிண்டர் பயன்படுத்தப்பட்டிருந்தபோது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
Also Read : இனிமே EB பில் கட்டலைனா அவ்வளவுதான்..! மின் வாரியம் வெளியிட்ட புதிய திட்டம்!!
அதன்பிறகு, தகவல் தெரிந்த உடன் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், பெட்டியில் இருந்த 90 பேரில் 80 பேருக்கும் மேற்பட்டோர் தப்பி ஓடியுள்ளார்கள். மேலும், ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலியாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.