குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு..! குளிக்க தடையா?

Sudden flood in Kurtalam Is it forbidden to take a bath-Flooding At Courtalam Waterfall

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை , ஆகஸ்ட் மாதங்களில் சீசன் காலமாகும். இந்த காலகட்டத்தில் பிரதான அருவியான குற்றாலம் மெயின் அருவி , ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் ஆர்ப்பரித்து வரும் தண்ணீரில் ஆனந்தமாய் குளிப்பதற்கு பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழையால் பிரதான அருவியான குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு வளவை தாண்டி தண்ணீர் கொட்டுகிறது. ஆர்ப்பரித்து வரும் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு நலன்கருதி அருவியில் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் நேற்று இரவு முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. மற்ற அருவிகளில் வெள்ளபெருக்கு குறையும் பட்சத்தில் சுற்றுலா பயணிகள் அந்த அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here