திடீர் சோதனையில் வருமான வரித்துறையினர்..! இதில் மாட்டிகொண்ட நிறுவனம் எது தெரியுமா?

Sudden test..! Do you know which company is involved

பிபிசி நிறுவனம் இங்கிலாந்தை மையமாக வைத்து உலக அளவில் செய்திகளை இந்தி, தமிழ் உள்ளிட்ட சில மொழிகளில் தனது சேவையை தந்து வருகிறது. பிபிசி சமீபத்தில் குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடியை தொடர்புபடுத்தி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்ட நிலையில் நாடு முழுவதும் மிகப்பெரிய பேசும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், அந்த ஆவணப் படத்தை மத்திய அரசு தடை செய்தது. அதனை மொழியாக்கம் செய்து வெளியிட்டு வந்த எதிர்க்கட்சியினருக்கு பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தன.

வருமான வரித்துறை அதிகாரிகள் டெல்லி கே.ஜி.மார்க் மற்றும் மும்பையில் உள்ள பிபிசி செய்தி அலுவலகங்களில் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டு வரவு செலவு ஆவணங்களை கைப்பற்றி சரிபார்க்கும் அந்த வேலையை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

ஆய்வு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் அலுவலகத்திற்கு வேலை ஆட்கள் யாரும் உள்ளே வர வேண்டாம் எனவும், மேலும் ஒரு வாரம் வரை பணிக்கு வர வேண்டாம் எனவும், குறுஞ்செய்தி அனுப்பியுள்ளதாகவும் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here