திடீரென பொதுமக்களின் வங்கி கணக்கில் போடப்பட்ட ரூ.1 லட்சம்..! மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த பொதுமக்கள்!!

நேற்று முன்தினம் தெலுங்கானா மாநிலம் முழுகு மாவட்டத்தில் ஏட்டூர் நகரில் உள்ள பொதுமக்களின் பலரது வங்கி கணக்கில் திடீரென 10 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் ஆனது. வங்கி கணக்கில் இருந்து பணம் டெபாசிட் ஆனவர்களுக்கு அவர்களின் தொலைபேசிக்கு குறுந்தகவலும் அனுப்பப்பட்டது. இந்த மர்ம டெபாசிட் பணத்தை ஒரு சிலர் தங்களது வங்கி கணக்கில் இருந்து தனது மனைவி மற்றும் பிள்ளைகளின் வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்தனர். ஒரு சிலர் உடனடியாக தங்களது வங்கி கணக்கில் இருந்து பணத்தை ஏடிஎம் மூலம் எடுத்தனர். பலரது வங்கி கணக்கில் ஆயிரம் முதல் 1 லட்சம் வரை பணம் அனுப்பப்பட்ட செய்தி மாநிலம் முழுவதும் பரப்பரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

Suddenly Rs 1 lakh was put into the public bank account The public jumped for joy read it now

மேலும், எஸ்.எம்.எஸ் வராத வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கை சரி பார்த்தனர். அதேபோல் ஆந்திராவில் உள்ள திருப்பதி உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஒரு சில பொதுமக்களின் வங்கி கணக்கில் பணம் டெபாசிட் ஆனது. இதுகுறித்து போலீஸாரும், வங்கியில் பணிபுரியும் அதிகாரிகளும் தகவல் சேகரித்து வந்தனர்.

Also Read : இனிமே ஏடிஎம் போகமலேயே ஈஸியா பணம் எடுக்கலாம்..! எப்படின்னு தெரியுமா? உடனே தெரிஞ்சிகோங்க…

ஏட்டூர் மண்டல மையத்தைச் சேர்ந்த சுமார் 50 பேருக்கு கடந்த சனிக்கிழமை வங்கிக் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டது. இந்நிலையில், இதுவரை பொதுமக்களின் வங்கி கணக்கில் பணம் அனுப்பியது யார் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணமானது ஒருசிலருக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையிலும் இன்னும் சிலருக்கும் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. இந்த பணப் பரிமாற்றம் குறித்து ஏத்தூர்நகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.