தனிமையை இனிமையாக்க சூப்பர் டிப்ஸ்..!

Super Tips To Sweeten Loneliness In Tamil

நீங்கள் தனிமையில் இருந்தால் அது வருந்தக்கூடிய விஷயம் இல்லை. தனிமையில் தான் உங்களையும் உங்கள் சுதந்திரத்தையும் கொண்டாடக் கூடிய நேரமாகும்.

நாள்தோறும் வேக வேகமாக சமையல் செய்துவிட்டு பணிக்கு செல்வது வழக்கம். உங்களுக்கான நேரம் தனிமையில் கிடைக்கும் போது உங்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து சாப்பிடலாம் அல்லது பக்கத்து வீடுகளுக்கு பகிர்ந்து கொள்ளலாம்.

மனநிம்மதி, அமைதி மற்றும் சுதந்திரமாக இருப்பதற்கு நமக்கு தனிமை கிடைக்க வேண்டும் என எண்ணுவோம். தனிமை உண்மையில் நிறைய விஷசயங்களை வாழ்வில் கற்று தரும். தனிமையில் நிறைய விஷசயங்களை யோசித்து செயல்படுவதற்கு உதவும். தனிமை வாழ்வில் ஒரு புதுமையான அனுபவத்தை கற்று தரும். தனியாக நேரத்தை செலவிடுவது மிகவும் ஆரோக்கியமானது என்று நான் நினைக்கிறேன். எந்த ஒரு கட்டுபாடும் இல்லாமல் தனிமையை எப்படி இனிமையாக்குவது என தெரிந்து கொள்வோம். தனிமையை இனிமையாக்குவதற்கான சில வழிகள்:

1. பயணம் செய்தல்

Traveling

வாழ்வில் பயணம் செய்தல் மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. பயணம் என்பது முடிவில்லாத ஒன்று. இந்த பூமியில் பார்த்து ரசிப்பதற்கு நிறைய இடங்கள் உள்ளது. உங்களுக்கு பிடித்த இடங்களுக்கு இரயில், பஸ், கார், பைக் மூலம் தனியாக சென்று பார்க்கலாம். பல இடங்களுக்கு சென்று புதிய விஷசயங்களை கற்று கொள்ளலாம். பல்லேறு இடங்களுக்கு சென்று பல்வேறு வகையான மனிதர்களுடன் பழகுவதன் மூலம் புது அனுபவம் கிடைக்கும். இந்த பயணம் உங்களுக்கு ஒரு புது அனுபவத்தை கொடுக்கும். இந்த மாதிரியான தனிமை நிலையில் பயணம் செய்யும் போது சுதந்திர பறவை போன்ற உணர்வு கிடைக்கும்.

2. ஷாப்பிங் செய்தல்

Shopping

நாம் வெளியில் தனியாக செல்லும் போது தைரியம் தானாகவே வரும். சிலருக்கு வீட்டில் பொழுதை போக்குவது கஷ்டமாக தோன்றும். அப்படி தோன்றும் போது வெளியில் சென்று ஷாப்பிங் செய்யலாம். தங்களுக்கு என்ன தேவை என்று தெரிந்து பொறுமையாக வாங்கலாம். தனியாக ஷாப்பிங் செய்வதில் மற்றவர்களின் கருத்துகளுக்கு அங்கு இடமே கிடையாது. தங்களுக்கு என ஒரு நேரத்தை செலவிட முடியும்.

ALSO READ >வேலையில் மன அழுத்தம் ஏற்படுகிறதா? இதோ அதற்கான சிறந்த தீர்வுகள்..

3. வீட்டை சுத்தம் செய்தல்

House Cleaning

வீட்டில் அதிக நபர்கள் இருக்கும் போது வீட்டு வேலைகளை எளிதில் செய்ய முடியாது. அதுவும் வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது வீட்டை சுத்தம் செய்தல் கடினமான ஒன்று. எனவே வீட்டில் யாரும் இல்லை எனும்போது வீட்டை சுத்தம் செய்யலாம். தனியாக இருக்கும் போது தங்களுடைய அறைகள் என அனைத்தையும் பொறுமையாக சுத்தம் செய்யலாம். மேலும் தேவையற்ற துணிகள் எவை என ஆராய்ந்து அவற்றை ஒதுக்கி வைத்து விட்டு தேவையான துணிகளை அடுக்கி அழகு படுத்துங்கள்.

4. சமையல் செய்தல்

Cooking

சிலருக்கு சமையல் செய்வது என்பது பிடித்தமான ஒன்றாக இருக்கும். ஆனால் பணி சுமை காரணமாக வேக வேகமாக சமைத்து விட்டு செல்வோம். சில சமயங்களில் சமைத்ததை கூட சாப்பிட முடியாத நிலை இருக்கும். தனியாக இருக்க நேரம் கிடைக்கும் போது தங்களுக்கு என்ன உணவு பிடிக்கும் என அறிந்து அவற்றை செய்து மன நிறைவுடன் சாப்பிடுங்கள் அல்லது பக்கத்து வீட்டார்களுக்கு கொடுத்து அன்பை பகிர்ந்து கொள்ளுங்கள்.

ALSO READ >எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? அதற்கு நீங்கள் பின்பற்ற வேண்டிய சில பழக்கங்கள்!

5. ஓவியம் வரைதல்

Painting

ஓவியம் வரைதல் என்பது மனதின் வெளிப்பாடகவே இருக்கும். தனிமையில் நீங்கள் ஓவியம் வரையும் போது புதுமையான விஷசயங்கள் மனதில் தோன்றும். அதை வரையும் போது ஓவியம் புதுமையாக தெரியும். தங்களுக்கு பிடித்தவற்றை வரையும் போது அது அழகிய தருணமாக இருக்கும். வண்ணம் தீட்டுவது மூலம் குழந்தை பருவத்தை பார்க்க முடியும்.

6. நடனம் ஆடுதல்

Dancing

பலருக்கு டான்ஸ் ஆடுவது பிடித்தமான ஒன்றாக இருக்கும். ஆனால் அனைவருக்கும் முன் ஆடுவது அல்லது வெளியில் ஆடுவதற்கு கூச்சமும் தயக்கமும் இருக்கும். எனவே வீட்டில் யாரும் இல்லாதபொழுது தனிமை நேரம் கிடைக்கும் போது உங்களுக்கு பிடித்த பாடல்களை போட்டு மகிழ்வுடன் ஆடுங்கள். தனிமை நேரத்தில் நமக்கு பிடித்த ஒன்றை எந்த ஒரு இடையுறு இல்லாமல் செய்வதே தனி சந்தோஷம் தான்.

ALSO READ>குளு குளுன்னு இருக்கும் குளிர்கால பிரச்சனைகளும் அதற்கு சூடான தீர்வுகளும்..

7. யோகாசனம் மற்றும் உடற்பயற்சி செய்தல்

Yoga and Exercise

இந்த கால கட்டத்தில் மனிதனின் உடல்நிலை மிகவும் ஆரோக்கியமற்றதாக உள்ளது. அதற்காக யோகா அல்லது உடற்பயற்சி செய்யலாம். யோகா செய்வதற்கு அமைதியான நிலை வேண்டும் என்பதால் தனியாக இருக்கும் போது இது போன்ற பயன் உள்ள செயல்களை செய்யலாம். மேலும் தினம்தோறும் ஜிம்மிற்கு சென்று உடற்பயற்சி செய்யும் வழக்கத்தை கடைபிடிக்கலாம். மனதுக்கும் உடலுக்கும் ஆரோக்கியம் அளிக்கும் தியானம் செய்யலாம்.

8. கைவினை பொருட்கள் செய்தல்

Making Handicrafts

வீட்டில் குழந்தைகளுடன் தனியாக இருக்கும் போது அவர்களுக்கு என நேரத்தை செலவிடுங்கள். அவர்களுக்கு ஏதேனும் கற்று தருவது அல்லது அவர்களுடன் சேர்ந்து விளையாடுவது போன்ற செயல்களை செய்யலாம். வீட்டில் தேவையற்ற பொருட்களை வைத்து ஏதேனும் பயன் உள்ள பொருட்களாக மாற்றுங்கள். அதாவது மரக்கட்டைகளால் பொம்மை செய்வது, கூடை பின்னுவது, வீட்டு அலங்கார பொருட்கள் செய்வது போன்றவற்றை அவர்களுக்கும் கற்று கொடுக்கலாம். மேலும் உங்களின் சருமம் மற்றும் கூந்தலை பராமரித்து கொள்ளுங்கள்.

ALSO READ> அரசு போட்டித் தேர்வுக்கு தயாராவது எப்படி?

9. திரைப்படம் பார்த்தல்

Watching Movies

திரைப்படம் பார்ப்பதற்கு என ஒரு நண்பர் கூட்டம் அல்லது மற்றவர் துணையை எதிர்பார்க்கதிர்கள். தனியாக இருக்கும் போது தான் தங்களுக்கு பிடித்த படங்களை பார்க்க முடியும். தனிமையில் இருந்தால் ஓடிடி தளத்தில் பிடித்த படத்தை போட்டு உங்கள் முதுகிற்கு ஏதுவான தலையணை வைத்து சாய்ந்து கொண்டே பார்ப்பது எவ்வளவு சுகம். அத்துடன் ஸ்நாக்ஸ், கூல்டிரிங்க்ஸ் சாப்பிடும் போது என்ன ஒரு சுகம் கிடைக்கும். இந்த சுகம் தியேட்டரில் கூட கிடைக்காது.

10. புத்தகம் படித்தல்

Reading a Book

தனிமை நேரத்தில் புத்தகம் படிப்பது ஒரு சிறந்த வழியாகும். புத்தகம் சிறந்த நண்பன் போன்றது. நீங்கள் ஒரு புத்தகத்தை படிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக நினைத்து கொண்டிருக்கும் புத்தகத்தை தனிமை நேரங்களில் படியுங்கள். புத்தகம் படிப்பது மூலம் தங்கள் அறிவு சார் திறன்களை வளர்த்து கொள்ள முடியும். அவை நாவல்கள் அல்லது அறிவுசார்ந்த புத்தகளாக இருந்தால் நன்றாக இருக்கும்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here