டி20 உலக கோப்பை:இன்று நெதர்லாந்து-ஜிம்பாப்வே அணியின் விறுவிறுப்பான ஆட்டம்!

T20 World Cup Netherland And Zimbabwe match today-T20 World Cup Match

ஆஸ்திரேலியாவில் 2022 T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நெதர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கிடையே நடைபெற்றது. இதில் முதலில் டாஸ்க் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்நிலையில், தொடக்க ஆட்டக்காரர்களாக ஜிம்பாப்வே அணியின் மாதவேரா, எர்வின் ஆகியோர் களம் இறங்கினர். எதிர் அணியின் பந்து வீச்சால் ஜிம்பாப்வே அணியின் வீரர்கள் அடுத்தடுத்து சொக்க ரன்களில் ஆட்டம் இழந்தனர். இந்த 20 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த அணியிலிருந்து 4-வதாக களம் இறங்கிய மூத்த வீரரான சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா ஆகியோர் சிறப்பாக விளையாடி ராசா 40 ரன்னும், வில்லியம்ஸ் 28 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்த அணி இறுதியில் 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களை மட்டுமே எடுத்தது.

இந்த அணியில் அதிகபட்சமாக ராசா 40 ரன்னும், வில்லியம்ஸ் 28 ரன்னும் எடுத்துள்ளனர். மற்ற அனைத்து வீரர்களும் சொக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். நெதர்லாந்து அணி தரப்பில் பால் வான் மீகெரென் 3 விக்கெட்டும், பிரண்டன் கிளெவர், லீடெ, வான் பீக் தலா 2 விக்கெட்டும், கிளாசென் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி ஆட உள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here